பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፡ ? . இ. ராமன் 4.389

  • - I -

போரில் மூண்ட்வர் புறம்காட்டி இடி - வந்ததற்காகப் படைத்தலைவர் நாசியை அறுப்பது என்ருல், முதலில் உங்கள் காசிகளை அறுக்கவேண்டும்; அதன்பின் இந்திர சித்தின் நாசியை துணிக்கவேண்டும் என்று இராவணன் எதிரே அந்தக் கிழவன் பேசி நின்றது அவனுடைய உள்ளத்துணிவையும் உறுதி' நிலே யையும் நேர்மையையும் நேரே தெளிவாக விளக்கி யுள்ளது. A. " விட்டில சீதையை: நாசியை வெட்டுதி. பதிவிரதையான சிகையை உரியவனிடம் விடாமல் சிறை யில் வைத்துக் கொண்டிருக்கிருய்; வியர்களுடைய நாசிகள்ை நேரே வெட்ட வேண்டும் என்று வீறுகொண்டு நிற்கிருப்; உன் உடைய பிடிவாக நிலையும் பிழைபாடான செயலும் மிகவும் மடமையான கொடுமையுடையன என்று அவன் இவ்வாறு கடு மையாகத் தாக்கிப் பேசித் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிருன். - பிரியமான உறவுரிமையாளன் ஆதலால் அம்முதியவன் மொழிகளைக் கேட்டு அரக்கர் அதிபதி யாதும் சிறவில்லை; ஆறி யே நின்ருன்; நாசியறுப்புத் தண்டனை நீங்கியது; நீங்கவே அந்தச் சேனைத் தலைவர் இருவரும் அரசனை வணங்கி : மன்னர் பெரும! முன்னர் நிகழ்ந்த இன்னல் நிலையை எண்ணி உன ராமையால் தாகர் எங்களை இகழ்ச்சிசெய்ய நேர்ந்தார்; தங்கள் தலைமகன் வானில் மறைய நேர்ந்தமையால் நாங்கள் ஊரில் மறைய நேர்ந்தோம்; போரில் நேர்ந்த பிழைகளை வெளியே நின்று இளிவாகப் பேசுவது விண்; நாங்கள் மீண்டும் போருக் குப் போகின்ருேம்; இனி மீண்டு வரமாட்டோம்; ஆண்டவா! எங்களுக்கு விடை தந்தருளுக” என்று உள்ளக் கொதிப்போடு அவர் வேண்டிப் போனர். அவரோடு, பத்துவெள்ளம் சேனை களும் பதினறு சிறந்த சேனைத் தலைவர்களும் தொடர்ந்து போயி னர். அடர்ந்த படைகள் ஆரவாரமாய் ஆர்த்துச் சென்றன. இங்கப் படைகளுக்கெல்லாம் அதிபதியானவன் மாபெரும் பக்கன் என்னும் பேரினன். மஹா பார்சுவன் என வால்மீகி முனிவர் இவனைக் குறித்துக் கூறியிருக்கிருர். தாமிராட்சன், யஞ்ளுகேது, சூரியசத்துரு, விரியமித்திரன், முச்சிரத்தன், வச் சி கந்தன் முதலிய சேனைக் கலைலுர்களோடு நால்வகைப் படை களையும் நடத்தித் தேர்மேல் எறி அவன் போர்மேல் போனன்.