பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4391 போருக்கு மூண்டுவருகிற சேனைத் தலைவர்களைத் குறித்து விபீடணன் இவ்வாறு கூறியிருக்கிருன். துமக்கண்ணன், வச்சிர தந்தன், சூரியகேது, பிசாசன், மாலி முதலிய படைத்தலைவர்கள் படைகளை நடத்தி வருகின்றனர் என்று கூறவே இராமன் அனு மானை நோக்கினன். அந்த அஞ்சனைச் சிங்கம் வானர் சேனைகளைப் பார்த்தது; பார்க்கவே யாவரும் ஆவலோடு ஆர்த்து எழுந்தனர். கடல் கொங்களித்து வந்ததுபோல் அடலாண்மை பொங்கி ஆரவாரத்தோடு வந்த அரக்கர் சேனைகளை வானரப் படைகள் எதிர்த்து மூண்டு கொதித்துப் பொருதன. இருதிறப் படைக ளும் கடுஞ்சினங்கொண்டு அடுத்திறலோடு ஆர்த்துப் போராட வே இடங்கள்தோறும் இரத்த வெள்ளங்களும் பினங்களும் பெருகிக் குவிந்தன. கோரக் , கொலைகள் யாண்டும் நீண்டன. நால்வகைச் சேனைகளும் கால்வகுத்துப் பொருதும் நிருதர் பரி தாபமா பழிந்துபட்டனர். வானரர்கள் எங்கும் அடலாண்மை மண்டி அடுசமராடினும் அங்கங்கே ஆயிரக்கணக்கில் அழிந்து மடிக்கனர். இரண்டு வகையிலும் அழிவுகள் எதிரெதிர் நேர்ந்தன. தேர் யானே குதிரைகளோடு, மூண்டுவந்து பொருத அரக்கர் பார்மேல் மாண்டுவிழுந்து கிடந்தனர்; நேரே நீண்டு எதிர்ந்த கவிகளும் கிலைகுலைந்து அழிக்கன. இவ்வாறு எவ்வழியும் வெவ் விய அழிவுகள் விளைந்துகொண்டிருக்கும்பொழுது மேலும் o இலங்கையிலிருந்து புதிதாய்ப் படைகள் பொங்கிவந்து போர்க் களம் புகுந்தன. மான வீரங்களோடு மண்டிவந்த அந்தச்சேனை களைக் கண்டதும் இலக்குவன் விரைந்து மூண்டு வெகுண்டு பொருதான். இவ்விரனுடைய வில்லாடல்கள் விசித்திர கதிகளில் வேலை செய்தன. நேரே போராட நேர்ந்தவர் யாவரும் தலையிழக் தம், கால் இழந்தும், கை இழந்தும், உடல் சிதைந்தும் உருக் குலைந்தும் இடங்கள்தோறும் மடிந்து விழுந்தனரே அன்றி யாதொரு பயனையும் அவர் அடைந்துகொள்ளவில்லை. சண்ட மாருகத்தின் முன் எதிர்ப்பட்ட செக்கைகள் போல் இலட்சும ணன் எதிரே' அரக்கர் திரள்கள் செத்து விழுந்த காட்சிகள் அமரருக்கும் அதிசய வியப்புகளை விளைத்து நின்றன. வானவர் தானவர் எவரையும் எளிதே வென்று யாண்டும் தோல்வி காணு மல் எவ்வழியும் வெற்றி வீரர் என வி.டிகொண்டு வாழ்ந்துவந்த - *