பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o 7. இ ரா ம ன் 4397 விளக்கி நின்றது. பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று பழம் பகைமையோடு செயிர்த்து உளந்துணிந்து வந்திருக்கிருன். கங்கை நீர் தழுவும் நாட்டுக் கொண்டல் என இராமனை இங்கே கவி இங்கனம் எழுதிக் காட்டியி ருக்கிருர் கங்கை, சரயு என்னும் வேநதிகள் மேவி யாவரும் புகழ அரிய பல வளங்களை மருவி யிருத்தலால் கோசலாதேசம் எங்கும் வியந்து பேசவந்தது. நீர்வளமும் நிலவளமும் நிறைக் துள்ள அந்தச் சிறந்த நாட்டின் அதிபதியாய்ப் பிறந்து எல்லா நாடுகளும் உய்ய எழுந்த உத்தமன் ஆதலால் அவ்வுதவி நிலையை இவ்வாறு உணர்த்தியருளினர். பசிய கோலத் திருமேனியன் என உருவ அழகும் உபகார நிலையும் ஒருங்கே தெரிய வந்தன. நீர்நாட்டுக் கொண்டல் என்னும் பேர் அவனுடைய நிலை மை நீர்மைகளை நேரே காட்டி உவகையின் சுவைகளை ஊட்டி யுள்ளது. கைம்மாறு கருதாமல் யாவருக்கும் பேருபகாரம் புரி யும் நீர்மையாளன் அரக்கர் இனத்துக்கு ஒர் எமனுய்த் தோன் றிலுைம் அவரது பாவச்சுமையை நீக்கிப் பரிசுத்தராக்கி விடுத லால் அவர்க்கும் உரிமையோடு அருள்புரிந்தவ னுகின்றன். புண்ணிய நதி பாயும் கண்ணிய நாட்டின் அதிபதி பாவங் களையே நாடித்திரியும் பாவிகளை விட்டி ஒழிக்கின்ருன். தண்ணிய நீர்மை வாய்ந்த அந்தப் புண்ணிய மூர்த்தியைப் பாவமேபயின்ற மகரக்கண்ணன் கோபமாய் மூண்டு எதிர்ந்தான். தேர்மேல் ஏறிச் சீரோடு சீறி வந்தவன் இவ்வள்ளலை நேரே கண்டதும் உள்ளம் கனன்று உருத்து ஆரவாரமாய்ப் பேச நேர்ந்தான். என்னுடைத் தாதை தன்னே இன்னுயிர் உண்டாய் என்.அறு முன்னுடைத் தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி ன்ெனுடைத் தாய தன்றே இன்றது நிமிர்வது என்ருன் பொன்னுடைத் தாதை வண்டு குடைந்துண்ணும் பொலம்பெரம் f ரு ரான். (1) தயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான் கேரன் புதல்வன் கொல்லாம் நெடும்பகை நிமிர வந்தாய் ஆயது கடனே அன்ருே ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய!” வயது சொன்னுய் என்ற்ன் இசையினுக்கு இசைந்த கோளான். (2) (மகரக்கண்ணன் வகைப்படலம், 15, 16)