பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4400 கம்பன் கலை நிலை இசை, புகழ், கீர்த்தி, சீர்த்தி என்னும் மொழிகள் காரண ஒளிகள் தோய்ந்து வந்துள்ளன. இசைத்தல், புகழ்தல், துதித் தல், சிறப்பாக வியத்தல் என வினைக்குறிப்புகளால் விளைந்திருக் கின்றன. ர்ேமைச் சிறப்புகள் சிறந்த நீர்மைகளால் நேர்ந்தன. திசைகள் யாவும் உவந்து மெச்சும்படி இராமன் இசைகள் பெற்றிருக்கிருன்; அந்தப் பேறு பெரும்பாலும் கோள்வலியான விரத்தால் பெறப்பட்டிருத்தலால் இசையினுக்கு இசைந்த தோள் என இங்கே அதன் உரிமையும் பெருமையும் தெரியவந்தது. இரத்தினமாலைகளும், முத்துமாலைகளும், மலர்மாலைகளும் புர ளும் கோள்களையுடைய சக்கரவர்த்தித் திருமகன் அவற்றை யெல்லாம் வேண்டாம் என்று வெறுத்துவிட்டு வந்தான்; அந்த வரவில் இசை அவனைச் சொந்தமாகச் சூழ்ந்துகொண்டு கோள் மேல் அமர்ந்து ஊழியும் தேயாத ஒளிகளைவிசிச் சுகமாய் வாழ்ந் துவருகிறது. இசையினுக்கு இசைக்க அழகிய வீரக்கோளளுேடு வசையினுக்கு உரிமையாய் வாய்ந்த ஒருவன் போராட மூண்டு தேரோடு வந்து நேரே நின்று ஆரவாரமாப் வாயாடநேர்ந்தான். தன் தந்தையைக் கொன்ற பழிக்குப் பழிவாங்க வந்துள்ள தாகப் பாரித்து நின்றவன் விரைந்து பகழிகளைக் கொடுத்து வெகுண்டு போராடினன். அவன் ஏவிய அம்புகள் யாவையும் துணித்து வீழ்த்தி இராமன் உல்லாச வினேகமாய் வில்லாடல் புரிந்தான். கேரிலிருந்துகொண்டு சாரிதிரிந்து விர வெறியோடு அவன் போராடி வருவதை விழைந்து நோக்கிவந்த இவன் விரைந்து கணைகளைக் கொடுத்துச் சாரதியின் கலையைக் துணித் துப் புரவிகளைத் அழித்துத் தரையில் உருட்டினன். அவன் உள் ளம் கொதித்து உருத்து அம்புகளைக் கடுத்துத் தொடுத்தான். அந்தப் பானங்களுள் ஒன்று விரைந்து பாய்ந்து இராமனுடைய வலத்தோளில் தாக்கி நிலத்தில் வீழ்ந்தது. விழவே இவ்விர வில் லியின் வெற்றிக்கணைகள் அவன் ஏறியிருந்த தேரை நீருக்கி வில் லைத்துணித்துக் கவசத்தைச் சிதைத்து மார்பை ஊடுருவிக் கடு வேகமாய்ச் சென்றன. அல்லலுழந்து அடுதுயரோடு அலமந்து நின்றவன் ஒல்லையில் விரைந்து வானில் மறைந்தான். மார்பிலி ருந்து உதிரம் ஒழுக வானவிதியில் ஒளிந்துபோனவன் அதிசய ம்ான மாயசாலங்களைத் தனது வரபலத்தால் அதி விரைவில் செப்