பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4402 கம்பன் கலை நிலை உண்மைகளை உணர்த்தவே இவ்வெற்றி வீரன் அந்த அதிதேவ தைகளை உரிமையாக் கொண்டுள்ள பகழிகளை எடுத்துத் தொடுத் தான். தொடுக்கவே அவை யாவும் விரைந்து மறைந்து போயின. . காலவன் LIEU) L_ என்றது வாயுவாஸ்திரத்தை. கடலவன் படை என்றது. வருளுஸ்திரக்கை. இராமனை இங்கே மேலவன் என்றது அவனது மூல நிலை தெரிய வந்தது. யாவருக்கும் என்றும் மேலானபரம்பொருளாய் கின்றவன் கீழே இரங்கிவந்து இப்படி ஒர் அரக்கனேடு போரா டித் தனது அவதார நீர்மையைத் துலக்கியுள்ளான். வந்த இடத் திலும் மக்களுக்குத் தலைவனை ஒரு சக்கரவர்த்தித் திருமகனப் மருவியிருத்தலால் மேலவன் என்னும் சீர்மை சிதையாமல் செவ் விபுரிந்து கின்ருன். அவனதுநிலை எவ்வழியும் தலைமையுடையதாய் யாண்டும் என்றும் விர வெற்றிகளோடு விளங்கி வருகின்றது. ! உரிமையான தெய்வப் படைகளைக் கைவைத்து விடவே பகைவன் செய்த மாயத் தோற்றங்கள் யாவும் அதி வேகமாய் அழிந்து அடியோடு ஒழிந்து போயின. துரத்தலோடும் மழையும் காற்றும் மறைந்தன. என்றல்ை இராமன் அம்புகொடுத்தவுடனே அம்மாயங்கள் யாவும் ஒளி எதிர் இருள்போல் மாயமாய் மாய்ந்து தொலைந்தன என்பது தேர்ந்து தெளிந்து கொள்ளவந்தது. வஞ்சமாய்ச் செய்த மாயசாலம் மறைந்துபோகவே அவன் நெஞ்சம் கலங்கி வேருெரு மாயத்தை விரைந்து புரிக் தான். ஆகாயம் எங்கனும் அவனுடைய உருவங்கள் தோன் றின; வில்லும் கையுமாய்ப் பல்லாயிரம் வடிவங்கள் பரந்து கின்று எல்லையில்லாதபடி அம்புகளை எங்கும் பொழிந்தன. கூர் மையான நெடிய குலங்கள் யாண்டும் கொடுமையாய்ப் பாய்க் தன. அவனது மாய நிலையையும் தீய வேலையையும் வியந்து திகைத்து இத்தாய விரனும் மயங்கி மறுகினன். ம்ாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பிலா உருவம் தான்னத் தேய்த்தர்ன் என்னு வண்ணம் காந்தனன் தெரிந்தி லாதான் காயத்தால் இனேயன் என்று கினேயலாம் கருத்தன் அல்லன்; இயொத்தான் திறத்தின் என்னேசெயல்? எனச் சிந்தை கொந்தான்.