பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4404 கம்பன் கலை நிலை ஆகாயத்தில் மறைந்துகொண்டு மாயப்போர் புரிந்துகின்ற மகரக்கண்ணன் இராமபாணத்தால் மாண்டு விழுந்த நிலையையும், பயங்கரமாய் மூண்டு மயக்கிய அந்த மாயத் தோற்றங்கள் அடியோடு ஒழித்துபோன வகையையும் இவை தொகையாக் காட்டியுள்ளன. வீரத் திறல்கள் விசித்திரங்களாய் நேர்ந்தன. காரிய வெற்றி வீரிய வேகங்களை விளக்கி வியப்புகளாய் விரிந்து நிற்கின்றன. போராடவந்த கிருதன் மிகுந்த நெஞ்சத் துணிவோடு வஞ்சகச் சூழ்ச்சிகளும் உடையவன்; சிறந்த வர பலங்களையும் பெற்றவன்; பழம் பகைமையை நினைந்து உள்ளே வயிரம் பாய்ந்து வந்தவன்; தன் தங்கையைக் கொன்றவனே மைந்தன்போய் வென்றுவந்தான் என்னும் பெருமையை எப்ப டியும் பெறவேண்டும் எனப் பேராசைகொண்டவன்; இராமனை நேரே நின்று போராடி வ்ெல்லமுடியாது போயினும் மாயவஞ் சனையால் வென்று விடலாம் என்று போராசை மண்டித் தேர் எறி வந்தவன் தனது எண்ணங்கள் எல்லாம் பாழாய் விண்ணில் மறைந்தும்உய்யாமல்மண்ணில் இவ்வண்ணம்மாண்டுவிழுந்தான். தான் ஒருவனே பல்லாயிர உருவங்களாய்த் தோன்றி கின்று குலங்களை வீசியது தன்னை இனம் தெரியாமல் மருண்டு மயங்கி இராமன் வெருண்டுபோய் விடுவான் என்று கருதியே. அவன் கருத்தின்படியே சிறிது திகைத்து நின்ற இவ்விர வில்லி பின்பு அதி மதியூகமாய் ஆராய்ந்து மேலே வேலை செய்தான். செம்புனல் சுவடு நோக்கிப் பகழி தூண்ட - என்றதல்ை இராமன் அம்பு தொடுத்திருக்கும் அதிசய நிலையை அறிந்து கொள்கின்ருேம். வானில் மறைந்துகொண்டு பல மாய வடிவங்களைக் காட்டி நின்ருன் ஆதலால் அவனது உண்மை நிலையை இவ்வாறு ஒர்ந்து காண நேர்ந்தான். இரத்தத் துளி சிந்துகிற அடையாளத்தைக் குறிவைத்து அவ்வழியே பக ழியை எய்திருக்கிருன்; அது விரைந்து பாய்ந்து கலையைத் துணித்து வீழ்த்தியது; கண்ணுல் நேரே காணமுடியாததையும் கருதி ஆய்ந்து யூகமாய் எய்து வீழ்த்த வல்லவன் இராகவன் என்பதை இங்கே ஒர்ந்து உவந்து உள்ளம் வியந்து நிற்கின்ருேம். இந்த வீரமூர்த்தியின் வில்லாடலையும் அதிசய சாகசத்தையும் வீரவுலகம் என்றும் போற்றி யாண்டும் புகழ்ந்து வருகின்றது.