பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - 7. இராம ன் 4405 தேவர் தம்பிரான் என இராமனே இங்கே கவி இவ்வாறு குறித்திருக்கிருர். மனித உருவில் மருவி நின்று அரிய காரியங் களைச் செய்து வருகிற இந்தப் புனித மூர்த்தியை வானவர் யாவ ரும் ஆவலோடு வணங்கி வருகின்றனர். தேவர்களுடைய அல் லல்களை நீக்கவே அவர் வேண்டுகோளின்படி ஈண்டு வந்தவன்; மூண்டு பொருது அரக்கரை அழித்து வருகிருன்; அவ்வரவால் அமரர்கள் தழைத்து வருகின்ருர், அந்த இனிய உறவுரிமை தெரிய இங்ங்னம் உரைத்தருளினுள், தேவர்.பிரான் மனிதனுப் வந்து நின்று அரக்கரைக் கருவறுத்து அகிலத்தையும் காத்துவரு கிருன் என்பார் இவ்வாறு பெயரை இனிது வார்த்து வழங்கினர். o கான்மகன் இறந்துபட்டவுடனே அவன் ஆற்றியிருந்த மாயத்தோற்றங்கள் யாவும் மாயமாய் மறைந்துபோயின. அப் போக்கை ஒர் உவமையால் இங்கே நன்கு உணர்த்தியிருக்கிருர். சூழ்ந்த மாயை கனவு மாய்ந்தால் ஒத்தது. துயில் நீங்கியபோது கனவு நீங்கியதுபோல் அவனது மாயா சாலங்கள் அடியோடு ஒழிந்துபோயின என்பதை இக ல்ை உணர்ந்துகொள்கிருேம். கனவில் கண்ட காட்சிகள் கன வில் காணுதனபோல் அம்மாயங்கள் நினைவிலும் காணமுடியா மல் நீங்கி ஒழிந்தன. பகை அழிந்த பாடு தெரிய வந்தது. தனது தங்கையை வென்றவனக் கொன்றுவிடுவதாகக் கரன் மகன் தருக்கி வந்ததும், இராமனேடு எதிர்த்துப் போரா டியதும், அயலே நீண்டு மறைந்து மாயவேலைகளைச் செய்ததும், மாண்டு மடிந்ததும், ஒருகனவு கண்டதுபோல் கடிது முடிக் தன எனக் கவி முடித்திருக்கும் முடிவு நுனித்தறிய வந்தது. மகரக் கண்ணன் இறந்து பட்டதை அறிக்கதும் இரத்தாட் சன் என்னும் சேனைத் தலைவன் சீறிப் போருக்கு மூண்டான். தேரைக் கடாவி அவன் சீறி வரவே நளன் என்னும் வானர வீரன் நேரே பாய்ந்து எதிர்ந்தான். அந்த நிருதைேடு இந்த வீரன் எதிர்ந்து பொருத நிலையைக் கவி சுவையாக உரைத்திருக் கிருர். போரின் காட்சிகள் விர மாட்சிகளாய் விளங்கி நின்றன. குருதியின் கண்ணன், வண்ணக் கொடிநெடுந்தேரன், கோடைப் பரிதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன்,