பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர ங்களையும் செதுக்கிச் சிதைத்தல்போல் முருட்டு அரக்கர்களே முறுக்கி முடிப்பவன் என்பது தச்சன் என்றதால் தெரியவந்தது.

406 கம்பன்கல நில எரிகணை சிந்திக் காலின் எய்தின்ை தன்னோடு ஏற்ருன் விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத் தச்சன் வெய்யோன். போராட நேர்ந்த இருவரையும் இதில் ஒருமுகமாய் ஊன்றி நோக்குகின்ருேம். இரத்தம்போல் சிவந்த கண்ணன்; அழகிய நெடிய தேரையுடையவன்; கரிய மேகம்போன்ற பெரிய உரு வினன்; காற்றைப்போல் கடுத்துவந்து சுடுகணைகளைத்தொடுத்து - விசி அடுத்து அடலாண்மையோடு அமராடினன். அவனைத் தடுத்து நிறுத்தி நளன் மூண்டு போராடினன். அவ்வாறு போரா டின வீரனுடைய பேரும் சீரும் நீரோடு நேரே தெரிய வந்தது. தட்டான், கொல்லன், தச்சன். * நளன் என்னும் வானர வீரனை இப்படி உல்லாச விைேத மாச் சுட்டிக்காட் டியிருக்கிருர், அவன் சிற்பத் தொழிலில் வல் லவன்; மயன் என்னும் தெய்வத்தச்சன் அமிசமாய்ப் பிறந்தவன்; அந்த வாசனையினல் அரிய பல் வேலைகளை யாரும் அதிசயிக்கும் படி செய்தான். சேதுவிலிருந்து இலங்கைவரையும் கடலை ஊட றுத்து அடலாண்மையோடு அணைவகுத்தவன் இவனே. பல்லா பிரம் வானரங்கள் திரண்டு வாரிக்கொண்டு வந்த கல்லுகளையும் மரங்களையும் ஒல்லையில் ஏந்தி உரிய இடங்களில் வீசி அரிய வல் லமையோடு இவன் செய்த சேதுபக்தனத்தை வா னவரும் உவந்து நோக்கி வியந்து நின்றனர். அவரது வியப்பு நிலை இவனுடைய வேலைத்திறத்தை ஞாலம் தெரிய விளக்கி கலம் துலக்கி நின்றது. முடுக்கினன் தருகென மூன்று கோடியர் எடுக்கினும் அம்மலே ஒருகை ஏந்தியிட்டு அடுக்கினன் தன்வலி காட்டி ஆழியை கடுக்கினன் நளன் எனும் நவையினிங்கின்ை. - (சேதுபந்தனம், 8) கடலில் அணை கட்டிய நளனது அதிசய நிலையை இகளுல் அறிந்துகொள்கிருேம். பரந்து விரிந்த கடலைத் தடுத்து நெடிய அணை வகுத்தவன் ஆதலால் விரிகடல் தட்டான் என்ருர். இரும் பைக் காய்ச்சி அடிப்பதுபோல் கொடிய அரக்கரைக் கடிது கொல்ல வல்லவன் என்பார் கொல்லன் என்ருர் நெடிய முரட்டு - -