பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன்' 4407 சாதிப்பெயரால் இவ்வாறு குறித்தது ஆதிநிலையும் அடுத் துள்ள தொழிலும் நுனித்து அறிய என்க. போர்க்களத்தில் மூண்டு போராட நேர்ந்த ஒரு போர்வீரனைப்பற்றிக் கூறும் போது இப்படிச் சிலேடை மொழியில் வினேகமாக உரைத்தது விசித்திரமாயுள்ளது. போராட்டு நிலையில் விளையாட்டும் விளைக் திருக்கிறது. இந்த முறையில் சாதி முதலியவற்றை இடை மடுத்து ஆசியச் சுவையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் மிக வும் வல்லவர். அவரது வினேதமான பாட்டுகள் விநயமான சுவைகள் மிக வுடையன. ஒன்று அயலே வருகின்றது. வாணியன் பாடிட வண்ணுன் சுமக்க வடுகன் செட்டி சேணியன் போற்றக் கடல்பள்ளி முன்தொழத் திங்கரும்பைக் கோணியன் வாழ்த்தக் கருமான் துகில்தனேக் கொண்டணிந்த வேணிய னைவன்.தட்டான் புறப்பட்ட வேடிக்கையே. ஒரு திருவிழாவில் சிவபெருமான் வீதியில் எழுந்தருளிவந் தார். அந்த உலாவின் நிலைமையைக் குறித்து இவ்வாறு பாடி யிருக்கிருர் வேதங்கள் பாடிவர முருகன் முதலானேர் முன்னே செல்ல அரிய பல ஆடம்பரங்களோடு இடப வாகனத்தில் ஈசன் எழுந்தருளிச் சென்ற கோலம் இந்த நிலையில் தெரிய வந்தது. வாணியன் என்றது பிரமன. வாணி= சரசுவதி. - வண்னன் என்றது இடபத்தை வள் ஆன் எனப் பிரிந்து நின்று சிறந்த காளைவாகனத்தை உணர்த்தியது. வடுகன்= வயிரவமூர்த்தி. செட்டி=முருகன். சேணியன்=இந்திரன். கடல்பள்ளி என்றது திருமாலை. கடலிலே பள்ளிகொண் டிருப்பவர் ஆதலால் இங்கனம் சொல்ல நேர்ந்தார். தட்டான் என்றது. சிவபெருமானச் சுட்டி நின்றது. மனம் வாக்குகளுக்கு எட்டாதவன்; எப்படி எட்டி நோக்கினலும் கட்டுப்படாதவன்; யாராலும் யாதும் அறியமுடியாதவன் என்ற பொருளையுடையது. வாணியன், வண்ணுன், தட்டான், கருமான் எனப் பல சாதிப் பேர்கள் இதில் மருவி வந்துள்ளன. காட்டில் பரவியுள்ள சாதிப் பிரிவினைகள் கவிகளுடைய பாட்டுகளில் இப்படிப்படிந்து வரலாயின. அவ்வரவுகள் கால தேசங்களைக் காட்டி நிற்கின்றன. வேணியன் தட்டான் என்றது விரிகடல் தட்டான் என் பதை ஒட்டி வந்துள்ளது. உண்மைகள் உய்த்துணரத் தக்கன.