பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,408 கம்பன் கலை நிலை தேரில் நீண்டு வந்த அந்த கிருகனேடு போரில் மூண்ட நளன் உக்கிர வீரமாய்ப் போராடினன். அவன் எவிய அம்புகளை யெல்லாம் இடை ஒதுக்கி விரைந்து பாய்ந்து தேரை வாரி எடுத் தக் கரையில் அடித்துத் தகர்த்து நொறுக்கி அவனையும் முடித்து ஒழித்தான். நளனது வெற்றி கவிகளுக்கு உவகையை விளைத்தது. o அதன்பின் சிங்கன் என்னும் சேனதிபதி சீறி ஏறிப் போரா டின்ை. அவைேடு பணசன் என்னும் வானரன் நேரே மூண்டு கெடிது பொருதான். கடுமையான போர் கடுத்து நீண்டது. கூரிய பானங்களை ஏவி கிருதன் கொலைபுரிய நேர்ந்தான்; அங் கிலேயிலிருந்து தப்பி விரைந்து பாய்ந்து தேரை வாரி எடுத்து வான வீரன் வானில் வீச மூண்டான், கேரிலிருந்து அதிவேக மாப் அவன் கீழே பாய்ந்தான்; பாயவே அவன் தலைமீதே தேரை எறிந்தான்; அவன் கிலைகுலைந்து வீழ்க்கான்; உதிரமும் நிணமும் பாய அவனைச் சிதைத்து அழித்து இவன் வெற்றி வீருேடு வேறு பகைவரை எதிர்நோக்கி நின்ருன். மூண்டுவந்த அரக்கானவரும் மாண்டு மடியவே தூதுவர் மீண்டும் இலங் கையை நோக்கிக் கலங்கிய நெஞ்சோடு கடுகி ஒடிஞர். காதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின்தானே மராமரம் மலேஎன் றின்ன வழங்கவும் வளைந்த தானே பராவரும் வெள்ளம் யாவும் பட்டன; பட்டிலாதார் இராவணன் அாதர் போனர் படைக்கலம் எடுத்திலாதார். கரன்மகனேடு வந்த சேனைகள் யாவும் அழிந்துபட்டதும், அங்கிருந்து தாதர் ஒடிப்போனதும் இகளுல் அறிய வந்தன. இழவு கிலேகள் கழிபெருக் துயரங்களாய்ப் பெருகிவருகின்றன; அவற்றை வேவுபார்த்து நின்ற ஒற்றர் உள்ளம் கலங்கி ஊரை கோக்கி ஓடி இராவணனிடம் போய் நேரே சொல்ல நேர்ந்தார். படைக்கலம் எடுத்திலாதார் என அவரைக் குறித்துக் காட் டியது உயிரோடு அவர் தப்பி ஒடுதற்குரிய காரணத்தைக் கருதி யுணர. படைக்கலம் எடுத்திருந்தால் அவரும் மாண்டு மடிந்தி ருப்பர்; ஆயுதங்களை எடாமல் அயலே ஒதுங்கி நின்றன்மயால் உயிர் பிழைத்து அவர் ஒட நேர்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து போராட மூண்டவரையே வானா வீரர்கள் கொன்று தொலைத் தனர்; பொதுவாய் கின்ற அரக்கர் எவரை யும் பாதும் வதைக்க வில்லை. அருள் புரிந்தே பிறரை அயல் ஒதுக்கி விலக்கியுள்ளனர்.