பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ரா ம ன் 4409 போரின் முறைமையும் நீதி நிலைமையும் இராமபிரானது சேனையில் சிறந்து நின்றன. உத்தமமான சுத்த விரன் ஆதலால் அவனைச் சேர்ந்துகின்றவர் யாவரும் யுத்த கருமங்களைக் கடைப் பிடித்துச் சக்திய விரங்களோடு பாண்டும் ஒழுகி வந்தனர். | தராதல வேந்தன் மைந்தர் என இராம லட்சுமணரை இங்கே இங்கனம் குறித்தது அவரது நிலைமை நீர்மைகளே நினைந்து தெளிய துட்டரைத் தொலைத்துச் சிட்டரை ஆதரித்துப் பூமியைச் சேமமாகப் பாதுகாத்து வரும் பொறுப்புடைய அரச குலத் தோன்றல்கள் தம் கடமையைக் கருத்தோடு செய்துவரு கின்றனர். அந்த வீரக்காட்சியை இது நன்கு விளக்கி கின்றது. வந்த படைகள் முழுதும் மாண்டுபடவே அயலே நின்ற தாதுவர் விரைந்து ஒடி அழிவு நிலைகளை இலங்கைவேந்தனிடம் கலங்கி உரைத்தார். அவன் உள்ளம் கடுத்து உருத்தான்; உம் றுள்ள கேடுகளை உணர்ந்தும் பாதும் தெளியாமல் மேலும் போருக்குச் சேனைகளை அனுப்பவே சீறி நின்று விருேடு முயன் முன். தனது அருமைத் தலைமகனுடைய அவல நிலையில் ஒரு சிறி தும் கவலையுருமல் மறுபடியும் அவனே அழைத்து வர ஆள் அனுப்பின்ை. அறிவு பாழ்போய் அழிவில் விரைந்தான். கரன்மகன் பட்ட வாறும், குருதியின் கண்ணன் காலின் சிரனெரிங் துக்க வாறும், சிங்கனது ஈறும் சேனப் பரமினி உலகுக் காகாது என்பதும் பகரக் கேட்டான் வரன்முறை தவிர்ந்தான் வல்லைத் தருதிர்என் மகனே என்ருன். எதிரியைப் பொருது வென்று வருவதாக வீரசபதம் கூறிப் பெரிய சேனைகளோடு போன கரன்மகன் முதலாயினர் அடி யோடு அழிந்து ஒழிந்தார் என்று அறிந்தும் இராவணன் யாதும் கலங்காமல் இந்திரசித்தை அழைத்துவரும்படி உரைத்திருப்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். அவனுடைய கெஞ்சத்துணிவு LTIJ_{5}]][[] மண்டிக் கொடுமைகொண்டு நெடுமையாய் நீண்டுள் ளது. வரன்முறை தவிர்ந்தான் என இராவணனைக் கவி இங்கே இப்படி வரைந்து காட்டியிருக்கிருர். நீதிநெறி விலகித் துேபுரிக் துவரும் பாதகன் என்பதை இங்கனம் பதமாக வுரைத்தார். வரன்முறை=ஒழுங்கு நீதி முறை அழிய இறை அழிக்கது. 552