பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 10 கம்பன் கலை நிலை .

  • * கன் நெறிகேடே தனது குலத்துக்குக் கேடாய மூண்டுள் ளது; அந்த உண்மையை இலங்கைவேந்தன் உணர்ந்துகொள்ள வில்லையே! என்று கவி இங்கே இரங்கியிருப்பதை நாம் அறிந்து கொள்கிருேம். நீதி நீங்கியதால் தீது ஓங்கியது என எங்குகிரும்.

முறையே மணந்த மனேவியர் இருக்க அயலான் மனைவியை அகியாயமாய் விழைந்தான்; அந்த சே விழைவினுல் நாசங்கள் விளைந்தன; விளைந்துகொண்டிருக்கின்றன. அழிகேடான அவ் வரவுகளின் பழிகிலேயை விழிதெரிய ஈண்டு விளக்கியருளினர். வரன்முறை கவருமல் ஒழுகிவரும் அளவே ஒருவனுடைய வாழ்வு விழுமிய மேன்மையாய் விளங்கிவரும்; முறைதவறின் அவ்வாழ்வு தாழ்வாய் இழிந்துபடும்; அவனும் பழிபடிந்து பாழா யழித்துபோவன். அந்த அழிவு நிலைகள் உலகம் தெளிய வந்தன. நாசமான அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணங்களை நன்கு தெளிய வரன்முறை தவிர்ந்தான் என்னும் வாசகம் இங்கே முதன்மையாய் வந்து நின்றது. சீதைமீதுகொண்ட ஆசையால் இராவணன் பல தீமைகளைச் செய்ய நேர்ந்தான்; சங்கியாசி போல் வஞ்சம் வேடம் தரித்து கெஞ்சம் துணிந்துபோய்க் கள் ளம்புரிந்தான்; அதற்கு உதவிபுரிந்த மாரீசன் உடனே செத் தான்; உத்தம பத்தினியான சானகி உள்ளம் பதைத்து உயிர் துடித்துள்ளாள்; சத்திய சீலனை இராமன் எல்லையில்லாத அல் லல்களையடைந்து நிக்கமும் நிலைகுலைந்து நின்ருன். அதனுல் அரக் கர் குலம் அடியோடு அழிய நேர்ந்தது. தன் குடி இழிந்துபடக் குலம் அழிந்து கொலேயக் கானும் பழிபடிந்து பாழாக இராவ ணன் செய்த ஒரு இழிசெயல் அழிதுயரங்களை நெடிது செய்து வருகிறது. கோலி வைத்த தீ குலத்தை எரித்து அழிக்கிறது. உத்தமிதன் உள்ளம் ஒருசிறிது கொந்தாலும் , எத்தனேயோ நாசம் எதிரெழுமால்-அத்தனுயர் : வெற்பெடுத்த வேந்தனும் வேரோ டழிந்தானே கற்பெடுத்த சீதையால் காண். ஈசனது வாசமான கயிலாச மலையை ஊசிவேரோடு எடுத் தவன் சீதைமேல் வைத்த ஆசையால் அடியோடு நாசமாயினன் என்னும் இது இங்கே அறியவுரியது. யாராலும் வெல்லமுடி யாத அதிசய வல்லமையுடையவன் தனக்கு நாசத்தைத் தான்ே"