பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4411 விளைத்துக்கொண்டான். பிறனுடைய புனித மனேவியை விழைந்த போதே அவனுடைய அற்நிலைகள் யாவும் இழந்து வரபலங்கள் எல்லாம் தொலைந்து அல்லலுழந்து அழிந்துபட நேர்ந்தான். 'புருஷ-ண்டு எறுகம் ஜப்பு: பூபதி விநம்சேடுது: அகில கிந்தலகுதுக் ஆலயம்பு பரஸ்தி கமகமு ப்ரத்யக்ஷ நரகமு." 'புருஷன் அறிந்தால் கொல்லுவான்; அரச தண்டனையுண் டாம்; பல பழிகளுக்கும் நிலையமாம்; ஆகவே பிறனுடைய மனே வியை விரும்புவது கொடிய நரகமே என வேமநர் என்னும் தெலுங்குக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். ஆசையால் சீதையை வஞ்சிக்க தேர்ந்தபோதே இராவண லுக்கும் இலங்கைக்கும் ஒருங்கே நாசம் மூண்டுகொண்டது. If a man dissemble, deceive, he deceives himself, and goes out of acquaintance with his own being. [Emerson] பிறரைக் கபடமாய் வஞ்சிக்க நேர்ந்தவன் தன்னையே வஞ்சித்துக்கொள்கிருன்; தன் சொந்த உயிரைவிட்டு அவன் விலகி வெளியே போகிருன்' என்னும் இந்த ஆங்கில வர்சகம் ஈங்கு ஊன்தி நோக்கி உணர்ந்துகொள்ளத்தக்கது. கெட்ட எண்ணம் தன் நெஞ்சில் தோன்றியபோதே நஞ் சை உண்டவன்போல் மனிதன் நாசக்கை அடைகிருன். நாசம் அடையாமல் சுகமாய் வாழ விரும்புகிறவன் தெறிகேடான கினேவுகளை எவ்வழியும் பாதும் எண்ணலாகாது. இவ்வாருன தரும நியதியைக் கடந்து வரன்முறைதவிர்ந்து அழிவு நிலையில் புகுந்துள்ள இராவணன் யாதொரு தெளிவு மின்றி இந்திர சிக்கை மறுபடியும் விரைந்து வரும்படிசெய்தான். வல்ல தருதிர் என்மகனை என்று அருகில் நின்றவரை ஏவி யிருத்தலால் காரியத்தில் அவன் விரைந்து நிற்கும் நிலை விளங்கி கின்றது. வினையின் விளைவினல் விளிவு நிலை விழி தெரிந்திலது. சேர்ந்த பகைவரை நிலைகுலைத்து வென்று நிலைமையைச் சீர்திருத்த வல்லவன் தனது கலைமகன் ஒருவனே என அவன் உள்ளத்தில் உறுதி செய்திருத்தலை உரைகள் உணர்த்தி வருகின் றன. உரிமை மிகுந்த அருமை மகனுடைய நிலைமையை ஒரு சிறி தும் கினையாமல் தனது கருமம் கருதி அவனைக் காண விரைந்தான்.