பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.12 கம்பன் கலை நிலை அரசன் எவவே தூதர் விரைந்து போய் இந்திரசித்திடம் வணங்கி மொழிந்தார். போனவர் யாவரும் பொன்றி முடிக் தாரோ?” என்று அம்மானவீரன் மறுகி வினவிஞன். சென்ற வர் எவரும் மீளவில்லை; ஆயுதம் எடாமல் அயலே நின்றமை யால் காங்கள் மாத்திரம் மீண்டு வந்தோம்; ஆண்டவனே!" என்று அவல நிலைகளை அவர் கவலையோடு கூறினர். அவ்விரன் மறுகினன்; வினையின் விளைவுகளை நினைந்து உள்ளம் வெதும்பி ன்ை; வந்த தாகரை முந்துறப் போகும்படி கூறிவிட்டுத் தனது அரண்மனையிலிருந்து புறப்பட்டுச் சிறந்த இரதத்தில் ஏறிஅந்தரங் கம் அறிந்துவர இந்திரசித்து இராவணன் மாளிகைக்கு வந்தான். வணங்கி மொழிந்தது. தங்கையைக் கண்டதும் கலைமகன் வணங்கினன்; நிலைமை மைகளையெல்லாம் நேரே தெரிந்துகொண்டான்; அதிசய விர னை அரக்கர் குலபதி எதிரியினுடைய வலி நிலையை எண்ணி நிலை தளர்ந்து கவலை தோய்ந்த முகத்தளுப் அரியணையில் அமர்ந் திருப்பதை துணுகி கோக்கி உறுதிகொண்டு உவந்து இருக்கு மாறு அவன் ஊக்கி மொழித்தான். மரியாதையோடு வந்து வணங்கித் தாகையைத் தேற்றி அம் மைந்தன் உரிமையாய்க் கூறிய உறுதிமொழிகள் விர ஒளிகளாய் விளங்கி நின்றன. வணங்கிநீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன உணங்கலே, இன்று காண்டி உலப்பறு குரங்கை நீக்கிப் பிணங்களின் குப்பை மற்றை நரர்உயிர் பிரிந்த யாக்கை கணங்குழைச் சீதை தானும் அமரரும் காண்பர் என்ருன். இலங்கை வேந்தன் மனம் கலங்காமல் மகிழ்ந்திருக்குமாறு மைந்தன் இவ்வாறு பேசியிருக்கிருன். ஐயா, நம் பக்கம் இருந் துபோன ஒக்கலும் மக்களும் மரபினரும் போரில் மாண்டுமடிக் தார் என்று நீங்கள் மறுகி வருக்கவேண்டா; இன்று நான் சென்று அந்தக் குரங்கின் திரள்களையெல்லாம் கொன்று பின மலைகளாக் குவித்து அம்மனிதர் இருவரையும் மடித்து வென்றி விருேடு வருவேன்; வானரங்களோடு தன் கணவன் அழிந்து பட்ட நிலையைச் சீதை நேரே காண்பாள், தேவரும் தெரிந்து திகிலடைந்து கம்பால் வந்து புகலடைந்து நிற்பார்; இந்த வெற். றித் திறலை விரைந்து செப்து வேகமாய் மீண்டு ஈண்டு நான்