பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 44.13 வருங்காட்சியை இலங்கைவாசிகள் யாவரும் கண்டு ஆனந்தக் களிப்படைவர்; அருந்திறலரசே! பெருக்ககைத் தந்தையே! நீங் கள்யாதும் வருக்காதிருங்கள்' என்று தொழுது விடைபெற்று இந்திரசித்து வெளியே வந்து தேரில் ஏறித் தன் மாளிகையை அடைந்தான். சேனைகளைப் போருக்கு எழும்படி போர்முரசு களை விதிகள்தோறும் அறையச்செய்தான். அறுபதுவெள்ளம் படைகள் ஆறு நிமிடத்தில் சகல ஆயத்தங்களோடும் விரைந்து திரண்டு யாண்டும் நீண்டு முரண்கொண்டு மூண்டு நின்றன. இந்திரசித்து எழுந்தது. நால்வகைச் சேனைகளும் பொங்கித் திரண்டு போருக்கு மூண்டு நின்றபோது இந்திரசித்து விரப் போர்க்கோலம் கொண்டு விசித்திர வேலைப்பாடுகளமைந்து விளங்கிய அழகிய ஒர் பெரிய கேரில் எறினன். வீரகம்பீரமாய் வில் எந்தி இரதத் தில் வந்து அவன் ஏறியபோது சேனைகள் பெருமகிழ்ச்சியோடு ஆரவாரங்கள் செய்தன. சிங்க ஏறுகள் பூண்ட அவனுடைய தேரைச் சூழ்ந்து முன்னும் பின்னும் எங்கும் பொங்கி நின்ற படைகள் வீர முழக்கங்களைச் செய்துகொண்டு அணிஅணியாய் அடைவே கடந்தன. போர் முரசங்கள் யாண்டும் முழங்க, வெற்றிச் சின்னங்கள் விருதுகள் ஊத, வேனுகானங்கள் பாணி - களுடன் இசைக்க மேகநாதன் தேர் வேகமாய்ச் சென்றது. சங்கொலி வயிரின் ஒசை ஆகுளி தழங்கு கானம் பொங்கொலி வரிகள் பீலி பேரொலி வேயின் பொம்மல் சிங்கத்தின் முழக்கம் வாசிச் சிரிப்புத்தேர் இடிப்புத்திண்கை மங்குலின் அதிர்வு வான மழையொடு மலேந்த வன்றே. (1) வில்ஒலி வயவர் ஆர்க்கும் விளிஒலி தெழிப்பின் ஒங்கும் ஒல்ஒலி வீரர் பேசும் உாைஒலி உரப்பில் தோன்றும் செல்ஒலி திரள்தோள் கொட்டும் சேண் ஒலி கிலத்தில் செல்லும் கல்ஒலி துரப்ப மற்றைக் கடல்ஒலி காந்த தன்றே. - (2) நாற்கடல் அனேய தானே நடந்திடக் கிடந்த பாரின் மேற்கடந்து எழுந்த துரளி விசும்பின்மேல் கொழுந்து விச மாற்கடற் சேனே காணும் வானவர் மகளிர் மானப் 蠶 பாற்கடல் அனேயவாட்கண் பனிக்கடல் படைத்த தன்றே (8)