பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.16 கம்பன் கலை நிலை லால் ஈண்டு அவன் மறுபடியும் போருக்கு வங்கதை அறிக் ததும் பெருந்திகிலடைந்து பொருந்திறல் ஒழிந்து மறுகியுளேந்து வானரங்கள் யாவும் மனங்கலங்கி மயங்கி நின்றன. சங்கை முழக்கிக் குணத்தொனிசெய்து .ெ பா ங் கி ய விருேடு சிங்க ஏறுபோல் விர கம்பீரமாய் அவன் சீறிநின்றன். அவனது படைக்கலன்களின் வலியும் படைக்கடல்களின் நிலை யும் கடுத்துகிற்கும் திறலும் எவரையும் கெடுக்கலங்கச்செய்தன. ஏழை பங்கத்தன் மலவில் அன்ன சில. இந்திரசித்தின் வில்லைக்குறித்து இப்படிச் சொல்லி யிருக்கிருர். வில்லின் விளக்கம் வியத்தகு நிலையில் விளங்கியுளது. உமாதேவியைத் தனது தேகத்தின் ஒரு பாகத்தில் வைத் திருப்பவர் ஆதலால் பரம்பதியான சிவபெருமான ஏழை பங் கத்தன் என்ருர். பார்வதியை எழை என்றது பெண்மையின் உண்ம்ைக்கு உறையுள் என்பது தெரிய. குதுவாது யாதும் அறியாதவள், மெல்லிய இயல்பினள், எல்லாம் தெரிந்தாலும் ஒன்றும் தெரியாதவள் போல் உளம் அடங்கியிருக்கும் நீர்மை, யாருக்கும் விரைந்து இரங்கியருளும் பேரருளுடைமை, தாய் மைத்தன்மை முதலிய துTப நீர்மைகள் யாவும் ஏழை என்னும் பெயருள் இனிகமைந்துள்ளன. ஏழை பங்கத்தன் என்னும் இதில் ஏழை பங்காளன் என மற்று ஒரு பொருளும் உய்த் துணரும்படி உள்ளே தொனித்து ஒளிபுரிந்து நிற்கிறது. திரிபுரவாசிகளான கொடிய அசுரர்களை அழித்து ஒழிக் கும் பொருட்டுச் சிவபெருமான் மேரு மலையை வில்லாக் கொண்டு வல்லாண்மை புரிந்தார் ஆதலால் அந்தப் பார வில்லைப்போல் அரிய பல மகிமை வாய்ந்த பெரிய வில்லை இன்று போருக்கு இந்திரசித்து எடுத்துவந்துள்ளான்; அவ் வுண்மையை மலை அன்ன சிலை என இன்னவாறு குறித் தருளினர். மலைய வந்துள்ள சிலையின் நிலைமை தெரிய வந்தது. தேவ தேவர்களை உபாசித்து அருந்தவங்கள் செய்து பெற்றுள்ள அதிசய ஆயுதங்களை யெல்லாம் மேகநாதன் யூக விவேகமாய் அன்று கொண்டுவந்துள்ளான் என்பதை இங்கே கண்டுகொள்கின்ருேம். கருமக்காட்சி மரும மாய்மருவிநின்றது.