பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4419 இடையுளது எம்பால் நல்கிப் பின்நிரை நிற்றிர் சண்டிப் படையுள தனேயும் இன்றுஎம் வில்தொழில் பார்த்திர் என்ருன் (2) போர்முகத்தில் வானா சேனைகளை முன்னே செல்லாதபடி அடுத்துப் பின்னே நிறுத்துமாறு சேனதிபதிகளுக்கு இராமன் தரவு கொடுத்திருப்பதை இங்கே உற்று நோக்கி உவந்து |கிருேம். தன்னை அடுத்துள்ளவர் அல்லல் உருதபடி இவ் வள்ளல் அவரைக் கருணையோடு காத்து இனிது ஆதரித்து வரும் திறத்தை இது தனியே வார்த்துக் காட்டியுள்ளது. வெய்யவன் என்று இந்திரசித்தை இங்கே விதந்து குறித் - அவனுடைய கொடிய செயல்களை கினைந்து. மாயவிஞ்சை பால் வானில்மறைந்து நின்று நாகபாசத்தை ஏவிக் தீய கொலை களே கெஞ்சம் துணிந்து முன்னம் செய்தான் ஆதலால் அந்த வஞ்சக்தியனல் மீண்டும் தன் படைகள் மாண்டுபடலாகாதே வன்.ற வேண்டிய எச்சரிக்கைகளை இந்த ஆண்டகை விரைந்து செப்திருக்கிருன். எதிரி நிலையை எதிரறிந்து ஏற்றது புரிந்தான். கடவுளர் படை என்றது தெய்வாஸ்திரங்களை. அக்கினி, வாயு, வருணன், முதலியோரை அதிதேவதைகளாக்கொண் டுள்ள அஸ்திரங்களை வரபலங்களோடு இந்திரசித்து பெற் பிருக்கின்ருன். அந்தக் தெய்வப்படைகளை வானரப்படைகள் மேல் எவி நீசத்தனமாய் அவன் நாசங்களை விளைத்து விடுவான் ான்று இங்கம்பி யூகமாய் ஒர்ந்து உறுதி செய்துள்ளான். அவ்வுண்மையை உரைகள் ஈண்டு வெளிப்படுத்தியுள்ளன. தடையுள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லிர். கடவுளர் படைகளே இந்திர சித்து ஏவின் அவற்றைத் കെ நிறுத்த முடியா; அவற்றின் உக்கிர வேகங்களைத் ாங்கி கிற்கவும் இயலா; அப்படைகள் வரின் கடையின்றி அழிந்துபடவே நேர்வர்; ஆதலால் பின் அணியில் ஒதுங்கி ல்ெலுங்கள் என வானத்தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருத்த லால் எதிரியின் வலியையும் நிலையையும் எவ்வளவு தெளிவாக மாமன் அறிந்திருக்கிருன் என்பதை இங்கே சர்ம் தெரிக்க கொள்கிருேம். போரைத் தனிஉரிமையாக நேரே விரும்புகிருன்.