பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.420 கம்பன் கலை நிலை தெய்வப் படைகளோடு செருக்கி வந்துள்ள அந்த அதி சய வீரனத் தானே முன் ஏறி அழித்து வீழ்த்தவேண்டும் என்று இவ்விரன் களித்து நிற்றலை உரை தெளித்து கின்றது. வலிய எதிரியோடு வினே படைகளைப் போருக்கு விடலாகாது; நேருக்கு நேராகத் தானே முன்சென்று வென்று தொலைக்க வேண்டும் என்று வீறுகொண்டு வில் ஏந்தி நிற்கும் இக் கொற்றக் குரிசிலின் வித்தகத் திறலையும், வெற்றி நிலையையும் விழிகளிப்ப நோக்கி ஈண்டு நாம் வியந்து கிற்கிருேம். எம்பால் நல்கிப் பின் நிற்றிர்! சேனைத்தலைவரை நோக்கி இம்மான விரன் இங்ங்னம் உரைத்திருக்கிருன். பெரும்படைகளோடு வந்து மூண்டுள்ள உத்தண்டமான இந்தப் போரை எமக்குத் தனியுரிமையாக உதவிவிட்டு நீங்கள் பின் வரிசையில் நில்லுங்கள் என்று வானரத் தலைவர்களை அயலே நிறுத்திவிட்டு இக் கோமகன் தம்பியோடு முன் ஏறி முனைந்து மூண்டு சென்றுள்ளான்; அந்த விரக்காட்சியை விழைந்து நோக்கி வியந்து மகிழ்ந்து விம்மிதம் அடைந்து வெற்றி நிலையைச் செம்மையாக உய்த்துணர்கிருேம். ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன். மண்ணுலக மாந்தரையும் விண்ணுலக வாசிகளையும் இனிது ஆதரித்து கெடிது பாதுகாத்தருளிய தசரதச் சக்கரவர்த்தியின் அருமைத் திருமகன் அரக்கர் திரளே அழித்து ஒழிக்கப் போருக்கு எழுந்தான் என இவ்விரக்குரிசிலை இங்கே இவ்வாறு குறித்துக் காட்டியிருக்கிருர்; எடுத்துக் காட்டியுள்ள இக்காட்சி குலத்தின் நிலைமையையும் வலத்தின் தலைமையையும் நிலத்தின் கடமையையும் கேரே கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளவந்தது. சம்பரன் என்னும் அசுரவேந்தன் அரிய வரபலங்களுட்ைய வன்; பெரிய போர்வீரன்; மூவுலக ஆட்சிகளை உரிமையாகப் பெற்றுத் தேவர்களைத் துயருறுத்தி யாவரையும் வருத்தி அட லாண்மையோடு கெடிது வாழ்ந்து வந்தான். கல்லோர் பல ரும் அவளுல் அல்லல் பல அடைந்து அலமந்து கொந்தனர்.