பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 4423 வியந்து மொழிந்து இந்திரசித்து விரகம்பீரமாய்க் கானும்காட்சி அவனது இராசகம்பீரத்தையும் அடலாண்மையையும் அதிசய லெயில் விளக்கி யாவரும் துதிசெய்யும்படி தோன்றி நின்றது. இருவர் போர் செய்கின்ருர் பலகோடி கிருதர்கள் பாழ் படுகின்றனரே! என்னே இது என அத்திண்ணிய விரன் வண்ணி ஏங்கியுள்ளமையால் இப்புண்ணியவிரர் அன்று போரா டியிருக்கும் விரத்திறல்களை நாம் நேரே தெரிந்து கொள்கிருேம். கால்வகைச் சேனைகளும் நாசிம் அடைந்திருக்கின்றன. அரக்கர் குழாங்கள் வீராவேசத்தோடு ஆரவாரித்து ஆற்றிய போர்த்திறங்களையெல்லாம் நீர்த்திவலைகளைப்போல் நிலைகுலைந்து தொலைய கெடிது நீக்கிக் கடிது ஊக்கி அடுதொழில்களைப் படு களத்தில் இருவரும் அதிசய நிலையில் ஆக்கியிருக்கின்றனர். இரண்டு வில்லுகளிலிருந்து எழுந்து பாப்கின்ற பானங்கள் எட்டுத் திசைகளிலும் பறந்து ஒடியிருக்கின்றன்; அதல்ையாண் டும் அழிவுகள் நீண்டு விளைந்துள்ளன. யானைகள் மாண்டு மடி. வகையும், தேர்கள் சிதைந்து வீழ்வதையும், குதிரை கள் மாய்ந்து தொலைவதையும், கலைகள் தோள்கள் காள்கள் துணிபட்டு அரக் கர் திரள்கள் அழிந்து குவிவதையும்கண்டு நெடுந்திகில்கொண்டு கடுங் கவலையோடு வியந்துள்ளமையால் தனது கடுமையான அடுக்தொழிலையும் மறந்து இந்திரசித்து அயர்ந்து நின்ருன். ஈது எவ் இந்திர சாலம்? இந்திரசித்து இந்தவாறு சிந்தனைசெய்து வியந்திருக்கிருன். சிவபெருமான் சிரித்துப் புரம் எரித்தான்; முனிவர்கள் சபித்துத் தொலைத்தார்கள் என்று அதிசயமான அழிவுநிலைகளைக் குறித்துக் கதைகளில் கேட்டிருக்கிருேம்; கேள்வியால் அறிந்த அந்த அழிவுகளை விடக் கண்ணுல் நேரே. காண்கின்ற இந்தப் படுகொலைகள் ஒரு பெரிய மாயாசாலமாகத் தோன்றுகிறது என்று மறுகி மயங்கிப் பெரிதும் தியங்கி உயங்கி யிருக்கிருன். வைகின்ருர் அல்லர்; எய்கின்ருர் என்றது இருவர் செப் கின்ற செயலை நோக்கி வந்தது. சபித்துச் சொல்லுகிற சாபத் கால் கிருதர் சாகவில்லை; குறித்து எய்கிற அம்புகளாலேயே யாவரும் மாய்ந்து படுகின்றனர். "எல்லாரும் ஒருங்கே காச