பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.24 கம்பன் கலை நிலை மாய்ப் போங்கள்' என்று ஒரு முனிவன் வெகுண்டு சபித்தால் அங்கனம் சாபமடைந்தவர் யாதொரு செயலுமின்றி விரைந்து அழிவர்; அருந்தவனுடைய ஒரு சொல் பலகோடி பேரை ஒரு கொடியில் கடிது அழித்துவிடும். அகாயாசமான அந்த அழிவு நிலையை இந்த இருவர் செய்கிற போர் இன்று தெளிவு செய் கின்றதே! என்னே இது என நெஞ்சம்வியந்து கெடிது திகைத் துகின்ருன்; அந்த நிலையில் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தை அதிசய விக்கையாய் எழுந்து எதிரிகளின் வலியை விளக்கியது. இந்திரசாலம் என்பது அரிய அதிசயங்களைக் காட்டும் அற் புத விஞ்சை. பெரிய மாயா சாலங்களைச் செய்ய வல்லவன் இங் வனம் மயங்கி மொழிக் துள்ளமையால் போரில் இயங்கியுள்ள இவ் வீரருடைய வெற்றி எதிரே தெரிய வந்தது. அசகாய குசனும் அயர்ந்து மறுகும்ாறு விசயங்கள் விளைந்திருக்கின்றன. விரக் குரிசில்கள் இருவரும் சாரி திரிந்து எவ்வழியும் வெவ் விய திறலோடு வில்லாடல் புரிந்திருத்தலால் பல்லாயிரம் அரக்கர் கள் ஒல்லையில் அழிந்து உருண்டனர்; இடங்கள் தோறும் பிணத் திடர்கள் பெருகி எழுந்தன. உதிரங்கள் எ ங்கும் ஒழுகி ஓடின. பார்க்கின்ற திசைகள் எங்கும் படுபிணப் பரப்பைப் பார்க்கும்; ஈர்க்கின்ற குருதி யாற்ருேடு யானேயின் பிணத்தை நோக்கும். இந்திரசித்து பார்த்து நின்றதையும், நோக்கி நொந்ததையும் இது வார்த்துக் காட்டியுள்ளது. மூண்டு பொருத சேனைகள் மாண்டு மடிந்துபடவே தன்மேலுள்ள ஆண்டகைக்கு அதிசய வெற்றி கிடைத்தது என்று உள்ளம் களித்து ஊக்கி விரைந்து அனுமான் துள்ளிக்குதித்துத் தோள்கொட்டி ஆர்த்தான். தளப்பருஞ் சேனே வெள்ளத்து அறுபதும் தலத்த தாக வளப்பருங் தேரின் உள்ளது ஆயிர கோடி யாகத் துளக்கமில் ஆற்றல் வீரர் பொருதபோர்த் தொழிலை நோக்கி அளப்பருங் தோளேக் கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான். (1) ஆரிடை அனுமன் ஆர்த்த ஆர்கலி அசனி கேளாத் தேரிடை கின்று வீழ்ந்தார் சிலர்; சிலர்படைகள் சிந்திப் பாரிடை இழிந்து போகப் பாரித்தார்: பைம்பொன் இஞ்சி ஊரிடை கின்று ளாரும் உயிரினேடு உதிரம் கான்ருர். (2)