பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.425 வெற்றிக் களிப்பினல் அனுமான் செய்துள்ள விர முழக் கத்தை இவை விளக்கியுள்ளன. அஞ்சாத அரக்கர் யாவரும் அஞ்சி மறுக அஞ்சனைச்சிங்கம் இப்படிக் கர்ச்சனை செய்திருக் கிறது. கோசலைச் சிங்கத்தைத் தன் குலத்தோளில் தாங்கிக் கொண்டு சமரபூமி முழுவதும் சாரி திரிந்து தாவி வாவி இத் ரேன் திரிந்த வேகவிசைகளால் அரக்கர் பலர் ஆவி தீர்ந்து அழிந்து வீழ்ந்தனர். அந்தவிர வேகம்நெடிய திகில விளைத்துளது. அனுமன் என்பார்க்கு இங்கு இனி இடம் இலை. என இந்திரசித்து எண்ணி ஏங்கி இனைந்து வியந்திருத்த லால் அன்று இவன் எங்கும் திரிந்து பொங்கிய விருேடு சாரி புரிந்து வேகித்து வந்திருக்கும் விசித்திர கதியை மானச நோக் கால் வியந்து பார்த்து மிகுந்த ஆவலோடு உவந்துகொள்கிருேம். மாயமாய் மறைந்து நின்று வஞ்சம் புரிந்து நாகபாசத்தை எவி மோசம் செய்து போனவன் மீண்டு வந்துள்ளான்; அவ னுடைய படைகளையெல்லாம் அடியோடு ஆண்டவன் காசம் செய்து தொலைக்க வேண்டும் என்றே இந்த ஆண்டகை மூண்டு பாய்ந்து உத்தண்ட வேகமாய் ஆண்டு உலாவி வந்துள்ளான். பகைமைக் கடுப்பு பழிவாங்கும் நோக்கோடு படு வேகமாய் மூண்டு அதிசய வெற்றியைக் கொடுத்து வந்தது. இந்த வாகன வேகத்தின் உதவியால் கோதண்ட வீரன் உல்லாச வினேதமாய் எல்லாரையும் கொன்று தொலைத்தான். இத்தீரனது கால் வேகமும், அவ் வீரனது கர வேக சரவேகங் களும் கிருதர் திரள்களை அதி விரைவில் நிலைகுலைத்து அழித்தன. அழிவு நிலைகளைக் கண்ட இந்திரசித்து உள்ளம் கொதித்து உருத்து மூண்டு தேரைக் கடாவிப் போர்முகம் புகுந்தான். சிங்க ஏறுகள் பூண்ட சிறந்த இரதத்தை விரைந்து செலுத்தி அம் மான வீரன் வெகுண்டு வந்தபோது வானரங்கள் மருண்டு மறுகின; வானவர்கள் வெருண்டு வெருவி விலகி ஒருவினர். மஞ்சினில் கரிய மெய்யான் இருவர்மேல் ஒருவன் வந்தான். இந்திரசித்தின் உருவ நிலையும், வரிசிலை ஏந்திப் பொருதிற லோடு இராம இலக்குவர் மீது இலக்காய் அவன் மூண்டு 554