பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4426 கம்பன் கலை நிலை வந்துள்ள முறையும் ஈண்டு நேரே தெரிய வந்தன. அடலாண் மையும் ஆங்காரமும் மிடலோடு ஓங்கி அவனிடம் விரவெறியாய் விறுகொண்டு கின்றன. பகைவரை அழித்து விட வேண்டும் என்று விழித்து விரைந்து அவன் தெழித்து வந்தது தேவரையும் நடுக்கி நின்றது. யாவரும் அஞ்ச நேரே வந்து போராடினன். இலக்குவன் வேண்டியது இந்திரசித்து தேரைக் கடாவிப் போர்மேல் மூண்டுவந்த போது இளையவன் அண்ணனைத் தொழுது ஐயனே! இந்த வெய்யவனே வென்று தொலைப்பது அடிமைக்குத் தனியுரிமை யான கடமையாம்; அடியேனுக்கே இப்போரை நேரே உதவி யருள வேண்டும் ஆண்டவனே!” என்று வேண்டி கின்ருன். அவனுடைய வேண்டுகோள் மான விரங்கள் மருவி வசை நீங் கும் வகையில் இசை ஒங்கி வந்தது. கம்பியைத் தொழுது தம்பி வேண்டிய நிலையை அயலே கான வருகிருேம். விர வசனங்கள் வித்தகக் காட்சிகளாய் விளங்கி விறுகொண்டு நிற்கின்றன. மாற்றம் ஒன்று இளேயவன் வளேவில் செங்கரத்து ஏற்றினன் வணங்கிகின்று இயம்புவான் இகல் ஆற்றினன் அரவுகொண்டு அசைப்ப ஆரமர் தோற்றனன் என்றுகொண்டு உலகம் சொல்லுமால். (1) காக்கவும் கிற்றிலன் காதல் நண்பரைப் போக்கவும் கிற்றிலன் ஒருவன் போய்ப்பிணி ஆக்கவும் கிற்றிலன் வென்றி ஆருயிர் நீக்கவும் கிற்றிலன் என்று கின்றதால். (2) இந்திரன் பகைஎனும் இவனே என்சரம் அந்தரத்து அருந்தலை அறுக்க லாதெனின் வெந்தொழிற் செய்கையன் விருந்துமாய் நெடு மைந்தரில் கடைஎனப் படுவன் வாழியாய்! (3) கின்னுடை முன்னர் இந் நெறியில் நீர்மையான் தன்னுடைச் சிரத்தைஎன் சர்த்தில் தள்ளில்ை பொன்னுடை வனேகழல் பொலன்பொன் தோளிய்ை! என்னுடை அடிமையும் இசையிற் ருமரோ. (4) நெடியன உலகெலாம் கண்டு கிற்கஎன் அடுசரம் இவன்தலை அறுத்தி லாதெனின்