பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"4428 கம்பன் கலை நிலை உணர்த்தியுள்ளன. தன்னை நாகபாசத்தால் முன்னம் பிணித்து மோசம் செய்து போனவன் ஆதலால் அவனை இன்று நாசம் செய்து தொலைக்கவேண்டும் என்னும் வீராவேசம் இந்த விர மகனிடம் வீறுகொண்டிருக்கலை கண்டு வெளிவந்துள்ள உரை களால் நாம் கூர்ந்து ஒர்ந்துகுறிப்புகளைத் தேர்ந்துகொள்கிருேம். இந்திரசித்தால் அடிபட்டான் என்னும் பழி தனக்கு நேர்ந் துவிட்டதே என்று இலக்குவன் நெஞ்சம் கவித்திருக்கிருன். அந்த உள்ளத் தவிப்புகள் இங்கே உரைகளில் வெளிவர நேர்ந் தன. கான் ஒருவனே அவைேடு போராடவேண்டும்; வேறு எவரும் துண்ை வரவேண்டாம் என்று வேண்டி யிருத்தலால் இந்த வீரக்குரிசிலின் வித்தகத் திறலை வியந்து மகிழ்கின்ருேம். சிறந்த வில்லாளி; அரிய வரபலங்களையுடையவன்; கொடிய மாயப்போர் செய்வதில் நெடிய பேர்பெற்றவன் என இந்திர சித்தை நன்கு தெரிந்திருந்தாலும் அவனை விரைந்து கொன்று வெற்றி பெற்று விடலாம் என்று இவன் உறுதியாகத் துணிக், துள்ளான். அந்த உண்மையை உரைகள்வெளிப்படுத்தி கின்றன. அந்தரத்து அருந்தலே அறுக்கலாது எனின் மைந்தரில் கடை எனப் படுவன். இந்திரசித்தின் தலை அக்தரத்தில் துள்ளி எழுந்து மண்ணில் வந்து விழும் காட்சியைக் கண் எதிரே இது காட்டியுள்ளது. இலக்குவன் இலக்காகக் குறித்திருக்கும் வீர சபதம் அவனது வெற்றித்திறலை விளக்கி மிளிர்கிறது. என்சரம் என்று அபிமான மாய்க் குறித்தது தனது அம்பின் அதிசய ஆற்றலைக் கருதி வந்தது. தன் பாணம் கப்பாமல் பாய்ந்து எதிரியின் தலையைத் துணித்து வீழ்த்தும் என்னும் துணிவு இலக்குவன் உள்ளத்தில் வேரூன்றி நிற்கின்றது. அந்நிலையை வாய்மொழி ஈண்டு இவ் வாறு வெளிப்படுத்தியது. பகையின் அழிவு தொகையாய்வந்தது. தன்னே அவன் அவமானப் படுத்திவிட்டதாக உள்ளம் கனன்று மானத்தால் புழுங்கி மறுகியிருத்தலால் தனியே சென்று தானே அவனைக்கொன்று தொலைத்து வென்றியுடன் வந்து அண்ணனே வணங்கவேண்டும் என்று வீறுகொண்டு தின் முன், குறித்தபடி கான் அவனே வென்றுவரேன் ஆயின் இழிந்த