பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.429 ழ்ேமகனய்க் கழிந்தவனுவேன்; உலகம் இகழ்ந்து பழிக்க ஒழிந்து போவேன் என்பான் Ꮌ6aᏞ எனப்படுவன் என்ருன். தலைமையான குலமகன் இப்படிச் சபதம் செய்துகொண் டது நேர்ந்துள்ள நிலைமையை நினைந்து சிந்திக்கச் செய்தது. கான் பராமுகமாயிருக்கும்போது வஞ்சகமாய் நாகபாசத்தை எவி வசை விளைத்துப்போனன் ஆதலால் அக்சேனே நாசம் செய் யவேண்டும் என்று நெஞ்சம் ஆவேசமாத் துணிந்துள்ளது. யாதொரு படைத்துணையுமின்றித் தன்னந்தனியே சென்று படை களோடு திரண்டுவந்துள்ள பகைவனை அடியோடு வென்று வரவேண்டும் என்று வீறுகொண்டு மூண்டிருப்பது வியத்தகு வெற்றியாய் நீண்டு நின்றது. தன்னைத் தனியே அனுப்பும் படி அண்ணனிடம் மன்ருடி வேண்டுகின்ருன் ஆதலால் அக் கம்பி உறுதியாப் கம்புமாறு வீர சபதத்தை நேரே இரமாய்க் கூறினன். உனக்கு நான்முயல் அடிமையின் பயன் இகந்து அறுவது ஆக. இது எவ்வளவு பெரிய ஆணை கருமமூர்த்தி இந்திரசித்தை நான் வெல்லவில்லையானல் உனக்கு உரிமையான அடிமை என் லும் பெருமை எனக்கு இல்லாமல் அடியோடு ஒழிவதாக' என்று இளையபெருமாள் இங்கே கூறியிருப்பது உலக உள்ளங் களே உருக்கி உரிமைப் பாசங்களை விளக்கி யிருக்கிறது. உடன்பிறந்த உரிமைத் துணைவன்; எவ்வழியும் இணை ஒத்த செவ்விய இளவல்;அந்த உத்தமக் கம்பி எத்தனையோ தாரம் அயல் ஒதுங்கி இப்படி அடிமை நிலையில் ஆவல்கொண்டு பேசுகிருன். 'அண்ணு! இந்திரசித்தை இன்று நான் வெல்லேனுயின் உங் களுக்கு உரிமைத்தம்பி என்னும் மகிமை எனக்கு இல்லாமல் ஒழிபட்டும்' என இன்னவாறு சொல்லவேண்டியவன்.அவ்வாறு சொல்லவில்லை. அடிமை அறுவதாக என்று குடி அடிமையான குல ஊழியன்போல் அண்ணன் எதிரே பேசி யிருக்கிருன். தானும் அயோத்தி மன்னன் மகன்; இராமனுக்கு அடுத்த தம்பி என்ற அந்த எண்ணமே இந்த இளவல் கெஞ்சில் இல்லை. இராமானுசன் என்று தன்னக் குறித்து உலகம் உரிமையோடு உவந்து சொல்லிவந்தாலும் தான் இராமனுக்கு ஏவல் செய்யும் பாதஆழியன் என்றே இவன் ஆதரவு புரிந்து வந்துள்ளான்.