பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,430 கம்பன் கலை நிலை இவ்வாறு கருதி வருவதற்குத் தனது பேரன்பே அன்றித் தன்னை ஈன்ற தாய் இட்ட ஆன்ற கட்டளையும் ஒர் காரணமாய் கின்றது. 'மகனே இவன் தம்பி என்னும்படி அன்று; அடியாரினின் ஏவல் செய்தி! (இராமா, நகர் நீங்கு 151) இராமன் கானகம் நோக்கிப் புறப்பட்டபோது தன் மக னுக்குச் சுமித்திரை இப்படிப் புத்தி போதித்து அனுப்பியிருக் கிருள். அந்த அருமைக் காய் வார்க்கையை இந்தக் குலமகன் யாதும் மறவாமல் யாண்டும் உரிமையோடு போற்றி வருகி முன். உயர்ந்த பண்பாடுகள் இவனிடம் ஒளி புரிந்துள்ளன. போர்மேல் போக மூண்டு உக்கிர வீரமாய் விடை வேண் டும்போதும் தாய்மொழியைத் தவருமல் பேணியிருப்பது இச் சேயின் விழுமிய நீர்மையை விளக்கி நின்றது. இவனுடைய மாதுருவாக்கிய பரிபாலனமும், அண்ணன்பால் கொண்டுள்ள அதிசய அன்பும் ஈண்டு ஒருங்கே நன்கு தெரிய வந்தன. ஆணை மொழி. இன்னது செய்து முடியேனுயின் இன்னவனுவேன் என்று உலகம் அறிய உறுதிகூறுவது வீரரது இயல்பாப் மருவியுள்ளது. சபதம், பிரதிக்கினை, சூளுறவு, வன்சினம் என்னும் மொழிகள் ஆண்மையாளருடைய வழிகளில் மேன்மையாய் வந்துள்ளன. தாம் ஆணையிட்டுக் கூறும் உறுதிமொழிகளால் அவரவரு டைய உள்ளப் பாங்குகள் வெளியே தெரிய வருகின்றன. எவ ராயினும் வாய் திறந்து சொல்லாடநேர்ந்தபோது அவரது உள்ளம் உடனடி வருகிறது. உரையால் உள்ளக்கை ஒர்ந்துகொள்கிருேம். 1 இல்லாளே அஞ்சி விருந்தின்முகம் கொன்ற நெஞ்சின் புல்லாளன் ஆக மறம் தோற்பின் (சிந்தாமணி, 2319) இன்று போரில் எதிரியை நான் வெல்லேன் ஆயின் மனே விக்குப் பயந்து விருக்கை உபசரியாமல் விட்ட புல்லய்ை இழிக் துபோவேன் ஆக” என்று ஒர் அரசன் இங்ங்னம் வஞ்சினம் கூறியுள்ளான். அவனது வாய்மொழி வாழ்க்கையின் வகையி இனத் தொகையா விளக்கி உபகார நீர்மையைத் துலக்கியுள்ளது. வந்த விருந்தினரை முகமலர்ந்து உவந்து பேணி உபசரிப் பது மனித சமுதாயத்துள் இனிய கருமமாய் மருவியுள்ளது.