பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4432 கம்பன் கலை நில சேயனேய என்மதலே பொன்ற அமர் செய்தோன் மாயமுன் அடர்த்துவய வாகைபுனே யேனேல் தாயர்பசி கண்டுகனி தன்பசி தணிக்கும் நாயனேய புல்லர்உறு. நரகில் உறுவேனே. (R) வஞ்சனேயில் என்மகனே எஞ்சமுன் மலைந்தோன் நெஞ்சம் எரியுண்ணஅமர் கேர்பொருதி லேனேல் தஞ்சென அடைந்தவர் தமக்குஇடர் கினேக்கும் நஞ்சனேய பாதகர் நடக்குநெறி சேர்வேன். (4) வினேயில் என்மகன்றனுயிர் வேறுசெய்வித் தோனேக் குனிசிலையின் நாளேஉயிர் கோறல்புரி யேனேல் மனேவி அயலான்மருவல் கண்டும் அவள்கையால் தினேயளவும் ஒர்பொழுது தின்றவனும் ஆவேன். (5) - (பாரதம், 18-ம் போர் 180-184) விசயன் இன்னவாறு விர சபதம் கூறியுள்ளான். தனது அருமை மகனை அபிமனை வஞ்சனையாக் கொன்ற வனே மறுநாள் பொழுது அடையுமுன் கொன்று தொலைப்பேன்; அவ்வாறு கோல்வேனுயின் இன்ன இன்ன இழிநிலையாளர் போல் பழி படிந்து பாழ்படுவேனுக என்று அவ்விரன் குளுறவு செய்திருக்கிருன். தாய் தந்தையரை நன்கு மதித்துப் பேணுதவர், ஒர வழக்குப் பேசுபவர், அடைந்தவரை ஆதரியாதவர், நெறி கெட்ட மனைவியுடன் கூடி வாழ்பவர், பழிபட்டவர்; இவ்வா ருன இழிநிலைகளில் மனிதன் வாழலாகாது என்னும் வழிவகை கள் ஈண்டு இவ்வகையில் உணர்த்தப்பட்டன. கரும நீதிகளைத் தழுவி மானம் பேணி மனித சமுதாயம் மாண்போடு வாழ வேண்டும் என்னும் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வந்தன. போர்மேல் செல்லும் வீரர்கள் ஆணைகூறித் தமது அருங் திறலாண்மைகளை விளக்கியிருக்கும் வழக்கங்களைக் கவிகளின் மொழிகளில் சுவையாகக் கண்டு வருகிருேம். காலதேசங்களால் வேறு பிரிந்திருந்தாலும் மேலான வீரர்கள் சீலமும் சீர்மையும் சிறந்து வந்துள்ளனர். அவ்வரவு நிலைகள் ஈண்டு உணர வந்தன. * அரிய தரும நீதிகள் யாவும் உரிய தமையனுக்குப் பிரிய மாய்ச் செய்யும் பணிவிடைகளே என இலக்குவன் எவ்வழியும் கருதியிருத்தலால் இவ்வழி அவன் வாய்மொழி இவ்வாறு வர