பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4436 கம்பன் கலை நில ஒருங்கே சாவது உறுதி; ஆவதை விரைந்து சொல்; என் கை அம்புக்கு இரையாகுமுன் முறையோடு பேசி முடிந்து தொலை' என்று இன்னவாறு அவன் வில்லை நேரே நிறுத்திக் காட் டி விர கம்பீரமாய் வெற்றி நிலையில் சொல்லாடி நின்றன். வாய்ப்பேச்சு அவனது தீர தைரியத்தையும் விர பராக்கிர மத்தையும் வியனுக விளக்கி நேரே ஆரவாரமாய் எழுந்துள்ளது. வெற்றித் திறலோடே விளைந்து வந்துள்ளவன் ஆதலால் கொம் றம் கொழித்து மற்றவர் எவரையும் இளித்து நோக்கிக் களித் துப் பேசினன். கோலா வென்றி மேலாக விளம்பி நின்றது. பொருது பொன்றுதல் புரிதிர் என்றதனுல் எல்லாரையும் எளிதே வென்று விடலாம் என்று அவன் உறுதி கொண்டுள்ளமை உணர வந்தது. என் எதிரே செத்துமடிய வந்திருக்கிறீர்கள்; ஒத்து மூண்டு நேரே விரைந்து சாகுங்கள் என்று கரைந்து நின்ருன். இன்னவாறு விரவாதமாய் அவன் கூறிய போது இலக்கு வன் அதி விநயமாய் எதிர்மொழி பகர்ந்தான். மதிமானை இந்த இளையவன் உரைத்த பதில் உரைகள் அமராடல்கள் பல வும் துலக்கி அதிசய ஆண்மைகளாய் ஆர்த்து வந்தன. அயலே வருகிற பாசுரத்தில் இவனுடைய மொழிகள் வீரஒளிகளை விசித் தீர தைரியங்களோடு வந்துள்ள நிலைகளைக் காண வருகிருேம். வாளில் திண்சிலேத் தொழிலினில் மல்லினில் மற்றை ஆளும் அறு எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் கோளுற்று உன்னெடு குறித்தது செய்துயிர் கொள்வான் குளுற்றேன். இதுசரதம் என்று இலக்குவன் சொன்னன். இளைய பெருமாள் எதிரியை நோக்கிப் பேசியிருக்கும் உரைகளை இங்கே நாம் ஊன்றி நோக்கி உவந்து நிற்கிருேம். அவன் முன்னம் கூறிய மொழிகளுக்கு எதிர்மொழிகளாய் விர ஒளிகளை வீசி இவை வெளிவந்துள்ளன. மாய வஞ்சனையாய் மறைந்து நின்று நாகபாசத்தை ஏவி மோசம் செய்து போன வன் ஆதலால் அவன்மீது மனக்கொதிப்போடு இம் மானவிரன் பேச நேர்ந்தான். ஏ மேகநாதா! நான் ஒருவனே உன்னேடு கன்னங்கனியாகப் போராட வந்துள்ளேன்; வில் ஆடல்புரிகி - - = -- - - - -

  • - -

- - -