பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4437 முயா? மல்லாட வருகிருயா? அல்லது வாள் வேல் வல்லயம் முத விய எந்தக் கருவிகளைக்கொண்டு எவ்வாறு பொரவிரும்பினும் அவ்வாறே நான் இசைந்து நிற்கிறேன். எங்கே போனலும் எவ்வழியானலும் உன்னை நான் கொன்று தொலைத்து வென்றி யுடன் மீள்வதாக வீரசபதம் கூறியே ஈண்டு மூண்டு வந்திருக் கிறேன்; உன்னுடைய ஆற்றல்களும் அடலாண்மைகளும் எவ் வளவு உண்டோ அவ்வளவையும் காட்டி அமராடல் செய்; நான் இடது கையில் பிடித்துள்ள இந்த வில் உன் உயிரைக் குடித்தே தீரும், செத்துத் தொலையுமுன்னே வித்தாரமாக விண் வார்த்தைகளைப் பேசிப் பெரிய வீரகுரனைப்போல் பிலுக்கி நில் லாதே; விரைந்து போர்செய்! நீ இறந்து படுவதைக்கண்டு மகிழத் தேவர் முதல் யாவரும் திரண்டுகிற்கின்றனர். காலத்தைக் கடத்தாதே; கருமத்தைச் செப்!' என இன்னவாறு இலக்குவன் எதிர்முழக்கம் செய்துள்ளான். முதலில்எதிரி கூறிய மொழிகள் இவ்வகையில் வீரியமான பதிலை நேரே வெளிவரச் செய்தன. 'நீ மட்டும் சண்டை செய்து சாகவந்துள்ளாயா? அல்லது உன் அண்ணனும் சேர்ந்து சாக நேர்ந்துள்ளான?' என்று மேக நாதன் பேசிய விரவாதத்துக்கு நேர்வாகமாக இவ்விரன் இங் வனம் விளம்பலானன். சொல்லின் வேகம் வில்லின் வேகம் போல் விறுகொண்டு வெற்றித்திறலோடு வெளி வந்துள்ளது. உன் உயிர் கொள்வான் குள் உற்றேன். * என்றது தான் போருக்கு மூண்டு வரும்போது கூறிய உறுதிமொழியை நேருக்கு நேராக இந்திரசித்தினிடம் இவ்வாறு விளக்கியருளினன். குறிக்கோளோடுவந்துள்ளதைக்குறித்தான். உன்னைக் கொல்ல, அல்லது வெல்ல வந்துள்ளேன் என்று சொல்லாமல் உன் உயிர் கொள்வான் உற்றேன் என்றது அழிவு நிலையை விழிகெரிய விளக்கித் தனது அடலாண்மையைத் துலக் கிகின்றது. மாயசாலங்களை எவ்வாறு மறைந்து செய்தாலும் நீ மாய்ந்து படுவது உறுதி என அவனது சாவை வலியுறுத்தி ஆவதை ஆய்ந்துகொள் என்று அச்சுறுத்தி எச்சரித்து நின்முன். பெரிய போர்வீரன்; அதிசயமான தீரன், அரிய வரபலங் களையுடையவன் என இந்திரசித்தைக் குறித்து கன்கு தெரிந்தி