பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.38 கம்பன் கலை நிலை ருந்தாலும் அவனை ஒரு திரணமாகவே இலக்குவன் எண்ணி யிருக்கிருன்; அந்த உண்மையை உரைகள் உணர்த்தி நின்றன. தீரமான இந்த வீர வசனங்களைக் கேட்டதும் இந்திரசித்து மாறி மொழிந்தான். அவனுடைய வார்த்தைகள் உறுதி ஊக்கங் களோடு உள்ளச் செருக்கையும் உணர்த்தி எள்ளற்குறிப்பில் இசைந்து வந்தன. அயலே வருகிற பாசுரங்களை ஆழ்ந்துநோக்கி அவனுடைய உறுதி நிலைகளை ஒர்ந்து சிந்திக்கவேண்டும். முன்பிறந்தவுன் தம்முனே முறைதவிர்த்து உனக்குப் பின்பிறந்தவன் ஆக்குவன்; பின்பிறந் தோயை முன்பிறந்தவன் ஆக்குவன்; இதுமுடி யேனேல் என்பிறந்த தல்ைபயன் இராவணற்கு என்ருன். (1) இலக்குவ்ன் எனும் பெயர்உனக்கு இயைவதே என்ன இலக்கு வன்கணக்கு ஆக்குவன்; இதுபுகுந்து இடையே விலக்குவன் என விடையவன் விலக்கினும் வீரம் விலக்குவன்கினேக் காணும்உன் தமையனும் விழியால் (2) அறுபதாகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் இறுவதாக்கிய இரண்டுவில் லீரும்கண்டு இரங்க மறுவதாக்கிய எழுபது வெள்ளமும் மாள வெறுவி தாக்குவன் உலகினேக் கணத்தின்ஒர் வில்லால். கும்ப கன்னனஎன்று ஒருவன்ர்ே அம்பினல் குறைத்த தம்பி அல்லன்கான் இராவணன்மகன் ஒரு தமியேன், எம்பி மாருக்கும் என்சிறு தாதைக்கும் இருவிர் செம்புண் நீர்கொடு கடன்கழிப்பான் இன்று இர்ந்தேன்.(4) (பிரமாத்திரப்படலம் 63.66) இந்திரசித்து அடலாண்மையோடு ஆரவாரமாய்ப் பேசியி ருக்கும் நிலைகளை இவை நேரே காட்டியுள்ளன. பெருமிதமாய்ப் பெருகி வந்துள்ள உரைகள் ஒருமுகமாய் அவனது உறுதி கிலையை உணர்த்தி கிற்கின்றன. ஏ. மனிதன் மகனே! மாண்டு மடிந்த நீ மீண்டும் வந்து என்னேடு போராட நேர்ந்துள்ளாய்! அசட்டுத்தனமான உன் மனத் துணிவு எனக்கு ஈகைப்பை விளைக்கிறது. உன்னைப்பெற்றவர் உனக்கு இட்டுள்ள பெயர் மிகவும் பொருத்தமானதே; இலக்குவன் என்று உனக்குப் பெயர் அமைந்திருக்கிறது. அதன் காரணத்தைப் பூரணமாக o o "