பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4440 கம்பன் கல நிலை ரங்களாய் விரிந்திருக்கின்றன. பிறப்பின் கிலைகளைச் சிறப்பாக எடுத்துக் கூறி இறப்பின் விளைவுகளைக் குறிப்பாக விளக்கினன். முன்பிறந்தவனைப் பின்பிறந்தவன் ஆக்குவேன்; பின்பிறந்தவனே முன்பிறந்தவன் ஆக்குவேன். என்றது செயற்குஅரிய எதையும் எளிதே செய்வேன்; திருட்டியையும் மாற்றி விடுவேன் என்பதாம். இப்படி ஆற்றல். தெரிய உரைத்தது அவனது அதிசய நிலையை அறிந்து கொள்ள. இராமன் இலக்குவனுக்கு முன்னே பிறந்தவன்; அந்த முறைப்படி அவன் முதலில் இறக்கவேண்டும்; இலக்குவன் அந்த அண்ணனுக்குப் பின்னே பிறந்த தம்பி ஆதலால் அம்முன் னவன் இறந்த பின்பே இப்பின்னவன் இறக்கவேண்டும். பிறப்பு முறையால் இப்படி அடையவுரிய இறப்பு நிலைகள் இங்கே பிழைபாடடைய நேர்ந்துள்ளன. கால நியமங்களையும் மேகநாதன் கலக்கி விடுவான் என்பதைத் துலக்கி யுள்ளான். இராமன் வந்து இந்திரசித்தோடு போருக்கு நேராமல் இளையவனே முதலில் முனைந்து மூண்டு நிற்கின்ருன்; முன்ன தாக மூண்ட இவனைக்கொன்றுவிட்டுப் பின்பு அந்த அண்ணன வென்று வீழ்த்துவேன் என்பதை இப்படி விருேடு விளம்பி யிருக்கிருன். உங்கள் இருவரையும் கவருமல் கொல்லுவேன் என்னும் குறிப்பை இவ்வாறு கொழித்துச் சொல்லி கின்ருன். முன் பிறந்தவன் பின்பு இறந்தான் பின் பிறந்தவன் முன்பு இறந்தான் எனப் பிரிந்து கின்று பொருள் தருவதும் அறிந்து கொள்ள வந்தது. பிறப்பு, இறப்புகள் பிறழ்ந்து உறழ்ந்தன. வயது முதிர்ந்தவர் முதலில் சாவதும், இளையவர் பின்பு இறப்பதும் பழங்கால வழக்கங்களாய் மருவியிருந்தன. அந்த் யுகதருமங்கள் அவனுடைய உரைகளில் யூகமா அறிய வந்தன. தங்தை இருக்க மைந்தன் இறப்பதும், தமையன் இருக்கத் தம்பி இறப்பதும் அவலத் துயரங்களாம். அந்த அழிதுயரங்களை விழிதெரியச் செய்வேன் என்று மொழிவழியே முழக்கிஞன். முன்னவனைப் பின்னவளுக்குவேன்; பின்னவனே முன்னவன் ஆக்குவேன் என அவன் பன்னியுரைத்திருப்பது உன்னி உணர் வந்தது. வீரசபதங்களே ஆரவாரமாய்க் கூறியது தனது திர நிலை களே நேரேதெளிவுறுத்தித் தெவ்வரை அச்சுறுத்தவே அமைந்தது.