பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,938 கம்பன் கலை நிலை கோகண்டத்திலிருந்து நேரே வெளிவருகிற ஒரு பகழி பதியிைரம் படை வீரர்களை ஒருங்கே உயிர் வாங்கி மருங்கு எங்கும் நில்லா மல் மேலே செல்லுகின்றது. மூண்டு கொதித்து முனைந்து வங்க வர் எவரும் ஒரு நொடியில் மாண்டு மடிவது யாண்டும் பெரிய அதிசய வியப்பாய் நீண்டது. விர வெறியோடு வெள்ளம்போல் சீறி வருகிற அரக்கர் அடுத்த கணத்தில் பினக் குவியல்களாய் மாறி நிற்கின்றனர். மாய்ந்து படுகின்ற கொலைகள் மாய சாலங் களாய்த் தோன்றி விளங்கின. ஊன்றி நோக்கிய அமரரும் ஒரு நிலையும் சரியாய்த் தெரியாமல் பெருமயலாப் மறுகி மயங்கினர். வளைத்த வில் கிமிராமல் இராமன் விளைத்து வந்த போராடல் அரக்கர் குழுவை அடியோடு அ ழி த் து வந்தது. எவ்வாறு அழிந்துபடுகின்ருேம் என்று அவர் பாண்டும் பாதும் கெரிந்த கொள்ள முடியவில்லை. தள்ளி வருகின்ருர், துடித்து விழுகின் ருர்; அடுத்த வந்து சூழ்ந்தவர் யாவரும் மறுத்த ஒன்றும் கான மல் மாண்டு மடிந்தமையால் நீண்ட பின மலைகளே யாண்டும் நிமிர்ந்த கோன்றின. தீயில் வீழ்க்க ஈசல்களாப் மாப்ந்தனர். வடிக்கணைகள் ஊழிஅனல் ஒத்தன; அரக்கர் உலந்த உலவைக் கானகம் நிகர்த்தனர். இராம பானத்தின் வலியையும் இராக்கதர் அழிந்துள்ள நிலையையும் இது உணர்க்கியுள்ளது. உவமானம் இருவகை கிலே களையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வக்கது. அனல் = தி. யுகாந்த காலத்தில் தோன்றி எல்லா வுயிர்களையும் ஒ ரு ங் ேக எரித்து மருங்கு எங்கும் அழித்து ஒழிப்பது ஊழியனல் என வந்தது. "தி செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசில் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் ■ ஊழி' (பரிபாடல், 8) ஊழிக் காலத்து நிலையை இது விளக்கியுளது. யுகமுடிவில் சரம் அசாம் முதலிய யாவும் அழிக் துபட இறைவனிடமிருந்து எழுந்து வருகிற நெருப்புக் கோளத்தை ஊழிக்தி என்று உலக சரித்திரம் உரைத்து வருகிறது. ஏழு கடல்களையும் ஈரேழு உல கங்களையும் நேரே அது அழிக்க வல்லது; அதன் எ தி ோ யாதும் எவ்வகையிலும் உ ருவாய் நிற்க முடியாது.