பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4942 கம்பன் கலை நிலை உடல் வலிமைகளும் அடலாண்மைகளும் # அறுதி ஊக்கங்களும் தீர தைரியங்களும் உடையராயினும் நெஞ்சம் தீயராய்ப் பாவ காரியங்களைச் செய்து வந்தமையால் ய ர வு ம் பாழாயிழந்து அரக்கர் அழியலாயினர். செப்த தீமை சேர அழித்தது. வஞ்சனை செய்து நெடு மன்றில் வளன் உண்டு கரி பொய்க்கும் நெஞ்சமுடையோர்கள் குலம். நாசம் அடைவதுபோல இராக்கதர் அடியோடு அழிந்து மடிந்தனர். கொடிய அழிவுகளின் முடிவு நிலை கெரிய வந்தது. கியாய சபையில் அநியாயமாய்ப் பொய்ச் சாட்சி சொல் லும் பாதகர் குலம் பாழாப் அழியும் எனக் கவி இங்கே வி ஆழி தெரிய விளக்கி யிருக்கிருர், நீதி முறைகளில் துே நேர்வது பெரும்பாலும் பொய்ச் சாட்சிகளால் ஆகலால் அவர் கொடிய பாதகர்களாய் இகழப்பட்டனர். வாதி பிரதிவாதிகளின் வழக் குகள் உரிய சாட்சிகளைக் கொண்டு உறுதி செய்யப்படுகின் றன. கட்சிகள், காட்சிகள், சாட்சிகள், ஆட்சிகள் என்பன வழக்குகளின் கிளைகளாப் க் தொடர்ந்த படர்ந்து வந்துள்ளன. கண்ணுல் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்; தீர விசாரித்தது மெய் என்னும் உலக வசனங்கள் நீதி விசாரணை யின் நிலைகளை விளக்கி வந்துள்ளன. வழக்காளர் இருவருடைய வாதங்களைக் கேட்ட நீதிபதி அதன் பின் அதற்குத் தக்க சான்று களை ஆராய்கின்ருர். அங்ங்னம் நேருகின்ற சாட்சி இலஞ்சம் முதலியன வாங்கிக் கொண்டு தன் நெஞ்சறிக்க உண்மையை மறைத்து மாறுபாடாகக் கூறின் வழக்கு வேருய்ப் பிழைபடும்; நீதிபதியை நிலைகுலைக்க, நேரான வழக்கைப் பாழாக்கி, உ ரிய வனுக்குக் கொடிய துயரங்களே விளைத்து விடுதலால் கரி பொய்த் தல் பொல்லாத பாவம் ஆயது; ஆகவே அப்பாவத்தைச் செய்த வன் பழிபடிக்க குடி மடிந்து இருக்க இடமும் கடந்தெரியாமல் அடியோடு அழிந்துபோக நேர்ந்தான். கரி= சாட்சி. உள்ளங் கை நெல்லிக் கனி போல் உள்ளதை ஒளியாமல் தெளிவாகச் சொல்லுவது எதவோ அது கரி என வந்தது. அந்த மெய்யை மறைப்பது வெப்ப ைேமயாயது. த ன் னே வாயில் வைத்தவனே நோயில் வைத்துக் குடியைக் கெடுத்து