பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4965 இராமபிரான் போராடியுள்ள நிலையும் அம்புகளைக் கொடுக் திருக்கும் திறலும் உம்பர் எவரும் புகழ்ந்து போற்ற இங்கனம் உயர்ந்திருக்கின்றன. இரண்டு கைகளையுடைய மனிதன் பல்லா யிரம் கைகளுடைய பரமன் போல் வில்லாடி யிருக்கிருன். எய்த அம்புகள் எவ்வழியும் பெய்யும் மாரிபோல் பெருகிவிரிந்து வெய்ய கிருகரை வேரோடு அழித்து நேரே ஒழித்திருக்கின்றன. ஆயிரம் வெள்ளம் படைகள் வந்துள்ளன; யானே குதிரை காலாள் முதலிய ஒவ்வொரு உடலையும் பல நூறு பானங்கள் ஊடுருவி ஓடி யிருக்கின்றன. ஆகவே பல்லாயிர வெள்ளங்க ளாப்ப் பானங்கள் வெளியே தள்ளி வந்துள்ளமை தெரிய வந்தது. இருகைகளையுடைய ஒரு மனிதன் இவ்வாறு எ ப்திருப் பது அதிசய மாயம் என யாவரும் துதி செய்ய நேர்ந்தனர். தேவரும் தேவதேவரும் இராம சரங்களை வியந்து திகைத்திருப் பது அவற்றின் திவ்விய மகிமைகளைத் தெளிவாவிளக்கிகின்றது. இத்தகைய அற்புதப் போரையும் அதிசய அம்புகளையும் என்றும் யாண்டும் கண்டதில்லை என்று கண்ணுதல் கடவுளே எண்ணி வியந்திருக்கலால் கோகண்ட வீரனுடைய வில்லாட வின் எல்லைகளை யார் அளந்து சொல்ல வல்லார்? இந்திரசால ாப் மாயா வினுேதங்கள் யாதும் செய்ய வில்லை; நேர்மையாப் கின்று வில்லாடலையே கூர்மையாய்ச் செப்திருக்கிருன். அந்தக் கோதண்டத்தின் வீர வேலை மூதண்டங்களையும் கலக்கி யிருக் கிறது. கொடிய கிருதரோடு பொருததிறல் நெடிய வியப்பாயது. சமர் பூமியில் சாரிதிரிந்து இவ் விர க்குரிசில் அமராடியுள்ள அதிசய நிலையை அமரர் யாவரும் வியந்து துதி செய்துள்ளமை யால் அந்தப் போரின் கலை பொருவரு நிலையில் பெருகி விரிந்து ஒருவரும் புரியாத ஒளியோடு உலாவியிருப்பதை உணர்ந்து கொள்கிருேம். அம்புத விர ம் கற்பனை கடந்து கின்றது. ஒரு மனிதன் இவ்வாறு செய்ய முடியுமா? ஒருகை வில்லைப் பிடித்திருக்கிறது; ஒரு கை அம்பைத் தொடுத்து வருகிறது; இந்த இரண்டு கைகளும் செய்த வேலையில் ஆயிரம் வெள்ளம் அரக் கர் சேனைகள் அடியோடு காசம் அடைந்திருக்கின்றன.