பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,973 தீய பாவிகள் ஒருங்கே மடிந்து போனமையால் பூமிகேவி துயளாய் உவந்து உயர்ந்தாள். மூண்டு வங்க மூலபலப் படை கள் ஆயிரம் வெள்ளம் எனத் தொகை அமைந்திருந்தாலும் எ ல் லையில்லாத வகையில் அவையாவும்முடிவாய் இறந்துகொலைந்தன. செத்த சேனைகள் எவ்வளவு இருக்கும்? என ஒரளவு மொத் கமாக அறிய உலகம் விரும்பும் ஆகலால் அங்க அளவு நிலையைக் கவி விநய சாதுரியமாய் முடிவில் நன்கு விளக்கியருளினர். அழிவுன் அளவு. ஆனே ஆயிரம் தேர்பதி யிைரம் அடர்பரி ஒருகோடி --- சேனே காவலர் ஆயிரம் பேர்படின் செழு மனிக் கவர்தம் ஒன்று ஆடும் கானம் ஆயிரம் ஆயிர கோடிக்குக் கவின் மணி கணில் என்னும் ஏனே அம்மனி ஏழரை நாழிகை ஆடியது இனிதன்றே. (மூல பல வதை, 228) இந்தக் கணக்கைக் கருதி கோக்குகின்ருேம்; பெரிதும் வியக்கின்ருேம். ஆயிரம் யானைகள், பதினுயிரம் தேர்கள், ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனதிபதிகள் ஆகிய இந்த நான்கு இனங்களும் ஒருங்கே அழிக்கால் அங்கே ஒரு கவந்தம் எழுந்து குதித்து ஆடும்; அவ்வாறு பத்து லட்சம் கோடி கவங்கங்கள் எழுத்து கூத்தாடினல் கோதண் டத்தின் துனியில் உள்ள மணி கனிர் என்று ஒரு ஒலி ஒலிக்கும்; அத்தகைய மணி ஏழரை நாழிகை வரை இடைவிடாமல் கன கன கன என்று ஒலித் தது; ஆகவே அழிந்தவர் அளவுகளை யூகமாய்ப் பெருக்கி உணர்ந்து கொள்ளுக என இங்கனம் உணர்த்தியருளினர். இந்தக் கணித முறையைக் காவியக் கவிகள் பலரும் கருதி வியந்திருக்கின்றனர். வில்லிபுத்துராழ்வார் இகனை அடியொற் றிப் பாடியுள்ளார். அக்கப் பாடல் அயலே வருகிறது. அநேகமாயிரம் பேர்படக் கவந்தம் ஒன்று ஆடும்; அக் கவந்தங்கள் அநேகமாயிரம் ஆடவெஞ் சிகல்மணி அசைக் அஒரு குரல் ஆர்க்கும்; அநேககாழிகை அருச்சுனன் சிலைமணி ஆர்த்தது அக் களம்பட்ட