பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4986 கம்பன் கலை நிலை தனது படைகளைக் கண்டவுடனே குரங்குகள் பயந்து ஒடிவிடும்; அவ்வாறு அஞ்சி ஒதுங்கி கிற்கும் படைகளை அடியோடு கொன்று தொலைத்து விட வேண்டும் என் அறு நெஞ்சம் துணிந்து தேர் மேல் ஏறி உரிய சில சேனைகளோடு கிருதர்பதி நேரே போனன். பகை வகையை ஒல்லையில் ஒழிக்கலாம் என உறுதி பூண்டு எல்லை தெரிந்து வல்லமையோடு ஒல்லையில் சென்ருன். சில்லி ஆயிரம் சில்லுளேப் பரியொடும் செறிந்த எல்லி வான் கதிர் மண்டிலம் மாறுகொண் டிமைக்கும் செல்லும் தேர்மிசைச் சென்றனன் தேவரைத் தொலைத்த வில்லும் வெங்கணேப் புட்டிலும் கொற்றமும் விளங்க. (1) அரக்கர் சேனே ஒராயிர வெள்ளத்தை அமரில் துரக்க மானுடர் தம்மைஎன் அறு ஒருபுடை அரங்கு வெருக்கொள்வானரச் சேனேமேல் தான் செல்வான்விரும்பி இருக்கும் தேரொடும் போயவண் இராவணன் எதிர்ந்தான். (வேல் ஏற்றபடலம்) மாயவஞ்சமாய் இராவணன் சென்றிருக்கும் தீய நிலையை இங்கே பார்த்து நிற்கிருேம். ஏழு தீவுகளிலுமிருந்து தனக்கு ஆதரவாக வந்த கிருதர் சேனைகளோடு மூலப் படைகளையும் சேர்த்து அனுப்பியிருக்கலால் இராமனும் இலக்குவனும் கப்பா மல் அழித்து போவர்; அவரை அங்ஙனம் அழிக்குமுன் வானர சேனைகளைத் தான் அழித்து விடவேண்டும் என்று களித்துச் சென்றுள்ளான். கபட வஞ்சனை கடுகி வேலை செய்துளது. ஆழிபோல் அடல் மண்டி ஆர்த்துவந்த அரக்கர் குலங்களைக் கண்டு அஞ்சி ஒடின ஆதலால் வெருக் கொள் வானரச் சேனை কো লক" அதன் அச்சமும் அவலமும் தெரிய வந்தன. ஒடிய படை களே அங்கதன் போய் உறுதிகூறி மீட்டு வந்தாலும் பொருகளம் அடையாமல் அயலே அவை ஒரு தொகையாய் நின்றன. அங்க நிலையில் அவற்றைக் கொன்று கொலைக்க மூண்டு இலங்கை வேந்தன் திரண்டசேனைகளோடு தேர்ஏறிச் செயிர்த்து வந்தான். இராமன் முன் எச்சரிக்கையாக இலக்குவனைப் பாதுகாப் புக்கு அங்கே அனுப்பி யிருப்பது அவனுக்குத் தெரியாது; ஆக லால் மிகவும் எளிதாகவே அனைவரையும் அழிவு செய்து விட லாம் என்று தெளிவு கூர்ந்து களி மீஅார்ந்து கடுகிச் சேர்ந்தான்.