பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5011 ஆற்ற வுரிய கருமத்தை அரிய கருமமாய்ப் போற்றி வருகிருன். என்னைச் சிறை மீட்ட வேண்டிய பொறுப்பு எனது கொழுந்தனுக்கே கனியுரிமையானது எனச் சீதை * முன்னம் அனுமானிடம் சொல்லியிருப்பதும் ஈண்டு உள்ளியுணரவுரியது. கொடிய சிறையை நீக்கி இனிய இறையிடம் என்னே க் சேர்ப் ப.து என்னைக் காத்திருந்தவற்கே கடன் என்று சானகி அனுமான் மூலம் வார்த்து விடுத்த அக்க வார்க்கை இளையவன் உள்ளக்கை எவ்வழியும் செவ்வையாய்ப் பிணித்து நேரே ஈர்த்து நிற்கிறது. கொழுநனன இராமன் மனைவியை மீட்ட உரிமைக்காகப் போராடுகிருன். கொழுக்கனை இலக்குவன் கொழுந்தியை மீட்டக் கடமைக்காக உறுதியோடு கருதி யுழைக்கிருன். உரிமையாளனது உடைமையையும் கடமையாளனது நிலை மையையும் ஈண்டு நாம் ஒருங்கே உணர்ந்து கொள்ளுகிருேம். இராவணனைக் கொன்று கொலைக்கால் அன்றிச் சிதையைச் சிறை மீட்ட முடியாது; அவன் உயிரோடிருந்து அசமாதானத் துக்கு இசைக்த அமைதியாப் அம ைமுடிவு செய்யான். தான் அடியோடு முடிந்து போவதையே அவன் முடிவாக முடிவு செய்து பாண்டும் கொடுமையாப் மூண்டு முனைந்துள்ளான். என் உயிரை விட்டாலும் நான் சீதையை விடேன் என்று வெறிகொண்ட பேயனப் அவன் மூண்டு நிற்கின்ருன். அங்கிலே கொலையையே அவாவி யுள்ளமையால் அவனது அழிவு நிலையை இளையவன் தெளிவாகக் தனது வெற்றியால் துலக்கியிருக்கிருன். அரக்கன் பட்டான் என்ற து இராவணன் அழிந்து படு வதைத் தெளிந்த கொள்ள வங்கது. அரக்கன் என இகழ்ச்சிக் குறிப்போடு குறிக்கது இர க்கமும் நீதியும் இன்றி அந்த இனத் கை யெல்லாம் நாசமாக்கி அழிக்கும் நீச நிலை தெரிய. செத்து மடியவே தீமையை அவன் பற்றி புழல்கிருன். சாவிலேயே களித்து வருவதை அவனுடைய வாழ்விலேயே கெளித்து வருகி முன். அருமை மகன் இறந்தான்; விரக்கம்பி அழிந்தான்; உரிய சுற்றங்கள் ஒழிக் கன; பெரிய போர் வீரர்கள் யாவரும் - _

  • இந்நூல் பக்கம் 3104 வரி 9 பார்க்க.