பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5050 கம்பன் கலை நிலை கின் கேளிர் எல்லாம் கெட்டது உன் பொருட்டினலே. கும்பகருணன் இந்திரசித்து அதிகாயன் அட்சயன் கும்ப்ன் கிகும்பன் தேவராக்ககன் சராந்தகன் முதலிய இராச குடும் பத்தார் பலரும் மாண்டு மடிந்து போனர் ஆதலால் அந்த இழ வுகளே யெல்லாம் விழி எதிரே தெரிய இ வ் வா று விளக்கிய ருளினன். குடியும் குலமும் அடியோடு அழிந்து படுகின்றன; இந்த அழிவுகள் யாவும் உன் பொருட்டே கடந்திருக்கின்றன; துளய பதிவிரதையான சீதைமீது நீ தீய காதல் கொண்டாய்; அதனால் அளவிடலரிய கொடிய சாதல்களைக் கண்டாப் முடி வில் உலகம் எங்கனும் இருக்க கிருகர் குலங்கள் எ ல் ல ம் ஒருங்கே திரண்டு வந்து மூல பலங்களோடு சென்று முழுதும் நாசமாயின; இவ்வளவு கொடிய சாசங்களை அறிந்தும் தெவ்வின் திவ்விய நிலைமையை உணராமல் வெவ்விய நிலையிலேயே பு லை யாடிவருவது பொல்லாத சேமேயாம், ஊ சி ல் உள்ளவராவது உயிரோடு பிழைக்கவேண்டுமானல் உனது பிழைவழியை விட்டு விலகி விழிதிறந்து தெளிவடைந்து சல்லவழியில் ஒல்லையில் நடக்க வேண்டும்; இல்லையேல் நமக்கு இங்கே இருப்பு இல்லை; சம் குலம் முழுவதும் பாழாப் விடும்; கிலேமைகளை நேர்மையோடு கூர்மையா ஆராய்ந்து சல்ல நீர்மையாய் கடந்து கொள்ளுக. சிட்டது செய்தி! உறுதியுணர்வுகளை உரிமையோடு கூறிவந்த மாலியவான் இறுதியில் இவ்வாறு கூறியருளினன். அரசே! நீ .ெ க ட் ட து செய்ததனுலேதான் கொடிய கேடுகள் எல்லாம் வந்தன; அதனை அடியோடு கைவிட்டு இனி மேலாவது சிட்டது செய்தி என்று கெஞ்சம் பரிந்து கிழவன் இப்படிக் கெஞ்சியிருக்கிருன். "சிட்டர் செயல் செய்திலே, குலச்சிறுமை செய்தாய்!” என முன்னம் * கும்பகருணன் இராவணனை நோக்கிக் கூறி யிருப்பதும் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ளவுரியது. சிட்டு= நீதிமுறையான நல்ல ஒழுக்கம். அதனையுடையவர் சிட்டர் என வந்தார். திட்டமான தருமநெறி சிட்டம் என வந்தது. --- TSTTSTSTTSTTS TS TS T S TS TSTS SS † இந் நூல் பக்கம் 3418 வரி 7 பார்க்க.