பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5054 கம்பன் கலை நிலை கின்றமையினலே தான் தனது இனங்களுக்கெல்லாம் பெரிய இன்ப விருந்து அரிய ஆடம்பரங்களோடு செய்ய நேர்ந்தான். அந்த மகிழ்ச்சியிலும் மண் விழுந்தது; விழவே கண் சி வங் து கடுத்து எண் சினக்த கறுத்து ஏற்றமாய் எழுங்கான். தன் வெற்றி வேலால் செத்து வீழ்ந்தவன் பிழைத்து எழுங் தது உண்மையா? உற்ற நிலைகளை முற்றும் நேரே உற்று உண ராமல் ஒற்றர்கள் உள்ளம்கலங்கிமாருயுரைத்திருப்பரோ? என்ற ஐயம் அவன் உள்ளத்தில் வெய்ய நிலையில் விரைந்து நீண்டது; ளேவே நீண்ட ஒரு கோபுரத்தின் சிகரத்தில் ஏறி நின்று தான் மூண்டு போராடிய சமரபூமியை ஆவலோடு நோக்கின்ை. கண்டு கலுழ்ந்தது. எதிரிகள் யாரும் சாகாமல் தன் இனத்தாரே எங்கும் செத் துப் பிணமலைகளாய்க்குவிந்து கிடப்பதைக் கண்டதும் இலங்கை வேந்தன் கண்ணிர் மல்கிக் கலங்கி நின்றன். இளவல் ஆவி மீண்டது என்று உளவு கண்டு வந்தவர் உண்மையைச் சொன்ன போது கன் ஆவி மாண்டது போல் மறுகி மயங்கினவன் இப் பொழுது நேரே கண்டவுடன் நெடுந்திகில் கொண்டு நெஞ்சம் திகைத்து நிலை குலைந்து கெடிது மயங்கிக் கடிது உயங்கின்ை. இறந்து கிடந்த கணவர்களைத் தேடி இளமங்கையர் உளம் கலங்கி உழல்வதையும், மக்களை சாடிக் காப்மார்கள் மறுகி அலை வதையும், ஒக்கலை நோக்கி உறவினர் பக்கம் எங்கும் பரிந்த திரி வகையும், பருந்து கழுகு நாய் நரிகள் பிணங்களை அருந்தி மகிழ் வதையும் பார்த்து இராவணன் பரிதாபம் அடைந்தான். கண்கள் ர்ே மல்கக் கரைந்து கலங்கி எண்களை இ ழ ங் த எ வ்வழியும் வெவ்விய துயரங்களில் ஆழ்ந்த இழிந்து அயர்ந்துமயங்கின்ை. குமிழிர்ே ஒடும் சோரிக் கனலொடும் கொழிக்கும் கண்னன் தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச்சிலே வழக்கில் சாய்ந்தார் அமிழ்.பெருங் குருதி வெள்ளம் ஆற்றுவாய் முகத்தில் தேக்கி உமிழ்வதே ஒக்கும் வேலை ஒதம்வந் துடற்றக் கண்டான்; (1) விண் பிளந்து ஏங்க ஆர்க்கும் வானா விக்கம் கண்டான்; மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்; கண்பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்; புண்பிளங் கனைய நெஞ்சன் கோபுரத் கிழிந்து போக்தான். (2)