பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5065 வீர பட்டம் விரித்தது. ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒதம தத்து கின்றன. வீரபட்டத் தொகை தயங்க முத்த ஒடையின் முரட்டிசை முழுமத யானே பத்து நெற்றியும் சுற்றிய பேரெழில் படைக்க - (10) வாகை மாலை சூடியது. காகர் கானில நான்முகன் நாடென நயந்த பாகம் மூன்றையும் வென்றுகொண்டு அமரர்முன் பணிந்த வாகை மாலேயும் மருங்குற வரிவண்டோடு அளவித் தோகை அன்னவர் விழிதொடர் தும்பையும் சூட்டி (11) அம்புப் புட்டில் அமைத்தது. அகழி வேலேயைக் காலத்தை அளக்கர்,துண் மணலே கிகழு மீன்களே விஞ்சையை கினேப்பதேன் கின்ற இகழ்வில் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல் லாத புகழெனச் சரம் தொலைவிலாத் துாணியும் பூட்டி. (12) தேர் வந்தது. வருக தேர்என வந்தது வையமும் வானும் உாக தேயமும் ஒருங்குடன் இவரினும் உச்சிச் 'சொருகு பூவன்ன சுமையது துரகம் இன்றெனினும கிருதர் கோமகன் கினேந்துழிச்செல்வதோர் கினேப்பில்.(18) (தேர் ஏஅறுபடலம்) இராவணன் யுத்த சன்னத்தனுப்ப் போர்க் கோலம் கொண் டுள்ள நிலைகளை இங்கே விழைந்து பார்த்து வியந்து கி ம் கி ன் ருேம். சிறப்போடு குறித்திருக்கின்ற அணிமணிகளின் அலங் கார விசேடங்களால் இலங்கேசனுடைய அதிசய ஆடம்பரங் களையும் அருந்திறலாண்மைகளையும் திருவின் போகங்களையும் உரு வின் யோகங்களையும் ஒ ர் ங் து உணர்ந்து கொள்ளுகின்ருேம். போராடநேர்ந்தவன் விரக் கோலங்களை விரைந்து சேர்ந்தான். அரிய வச்சி கவசத்தை மார்பில் அணிந்தான்; அதில் மருவி யிருந்த இரத்தினங்கள் பக்கம் எங்கனும் மிக்க ஒளிகளே விசின; இடையில் புனைந்த உடைவாள் இமையவர் எவரையும் அடைய வென்ற அதிசய ஆற்றலையுடையது; உள்ளே கச்சை 634