பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5076 கம்பன் கலை நிலை வையே எதிர்நோக்கி யிருக்கலால் மொழிவழியே அ. து முக்தி வந்தது. பகை நீங்கி உவகை ஓங்கி வாழ உறுதியா யிருந்தான். உள்ளத்தில் மறைவாய்ப் பதிந்து கிடந்தது உரைகளில் விரைவாய் வெளிப்பட்டு வந்தது. உறுதியான முடிவில் தன் வாழ்வை மு. டி க் க மூண்டுள்ளான்; அவ்வுண்மையை வாய் மொழி திண்மையாய் உணர்த்தி நின்றது. வென்றி பெறுவேன்; அன்றேல், பொன்றி முடிவேன் என்று விருேடு தேறி அவன் போராடப் பொங்கியிருப்பது வெளியறிய வந்தது. இன்று இரண்டில் ஒன்று ஆக்குவன் போரில் மூண்டு தேரில் ஏறியவன் இறுதியாய்க் க ரு தி யுள்ள உறுதி நிலையை இது காட்டியுள்ளது. இரண்டு என்றது எவற்றை? முதலில் விரித்த உரைத்தகை எண்ணுத் தொகையுள் அடக்கி மீண்டு இவ்வண்ணம் செவ்வையாய்க் குறித்தான். சீதை தாலியை இழந்து அழுது அழிவது; அல்லது மண்டோதரி மங்கலம் இழந்து மாண்டுஒழிவது. இந்த இரண்டுள் ஏகாவது ஒன்று இன்று முடியும் என்று முடிவு செப்து மூண்டு கின்ருன். அவனுடைய உறுதியும் ஊக்க மும் இறுதியை நோக்கி இறுமாந்துள்ளன. கருமத்தின் முடிவு மருமத்திலிருந்து மான விருேடு மருமமாய் வெளி வந்துள்ளது. போர் மூண்டதிலிருந்து நெடிய கொடிய அழிவுகளை நேரே கண்டிருக்கிருன். அதிசய வீரர்கள் அனைவரையும் இழந்து விட் டான்; அருமை மகன் மாண்டவுடன் மறுகி மயங்கி உருகி அழு கான்; பின்பு தேறி மூலபலங்களை அனுப்பினன்; அ ைவ அடி யோடு முடிந்து ஒழிக்கன; இவ்வளவு காசங்களை அடைந்தும் நெஞ்சம் தளராமல் நேரேபோராடத்தேர்மேல் ஏறியிருக்கிருன். சிறந்த அறிவாளி யாயிருந்தும் பழியான வழியில் இறங்கி எவ்வழியும் தெளியாமல் அழிவையே டி அடலாண்மை யோடு களிமிகுத்து நிற்கின்ருன். நாச காலம் மூண்டமையால் கல்ல அறிவு மாண்டதே பொல்லாத புல நீண்டதே எ ன் று மாலியவானும் நீண்ட துயரோடு கெடிது புலம்பியுள்ளான். சேட்டுகாலமுருகு செடு புத்தி புட்டுது' என்ற தெலுங்கில் ஒரு பழமொழி வழங்கி வருகிறது.