பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4755 மாண்டு மடிந்தாலும் சான் பிடித்த பிடியை பாண்டும் தளர வி டேன் என்று அவன் நீண்டு நிமிர்ந்து நிற்கும் நிலை நெடிய திமி ராப் கின்றது. அழிய நேர்ந்தவன் அழியாமையை நினைக்கான்) வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் கின்றுளன். - இலங்கை வேந்தன் கலங்காமல் எண்ணியுள்ளதை இது காட்டியுள்ளது. இர ாமனே வென்று வெற்றித் திருவோடு மீண்டு வாழமுடியாது போயினும் நீண்ட காலம் உலகம் யாண்டும் புகழ்ந்து வர நான் நிலைத்திருப்பேன் என அவன் நினைத்திருப்ப தை இங்கே நாம் நேரே கெரிந்து கொள்ளுகிருேம். எதிரியால் அழிந்து படினும் அழியாக நிலையை அடைந்து கொள்ளலாம் என்று அவன் தெளிந்திருக்கிருன். அங்கத் தெளிவு மொழி வழி யே விழி தெரிய வக்கது. அழிவு நிலையில் களி மிகுந்துள்ளது. இராமன் பேர் இருக்கும் வரையும் இராவணன் பேரும் இருக்கும் எனப் பேரிலும் சீரிலும் பேராசை கொண்டு போரா சையோடு பொங்கி நின்ருன். புகழ்மேல் மூண்ட ஆசை உயிர் வாழ்வை இகழ நீண்டது. செக்த விழினும் கனக்கு ஒர் கித்திய வாழ்வு நிலையாய் உண்டு என அவன் கினேந்து கொண்டான். வென்று இலன்; கின்று உளன் என்றது வெற்றி இன்மை யும் வேறு ஒன்று உண்மையும் விளக்கி நின்றது. இராவணன் போரில் வெல்ல வில்லையானல் மீண்டு வந்து ஊரில் வாழ மாட் டான்; ஆண்டே மாண்டு மடிவான்; அவ்வாறு மாண்டால் நீண்ட பெயர் உலகில் என்றும் நிலவி கிற்கும். அதிசய விர னன இராமனேடு போராடி மாண்டான் என இராவணனை உலகம் எண்ணி வரும் ஆகலால் அக்கக் கண்ணிய நிலையை அவன் கருதி உவந்து உறுதி மீதுளர்ந்து உள்ளம் துணிந்துள்ளான். _ கன் பேரைச் சாகாமல் நிலை கிறுத்த வீரச்சாவை அவன் விழைந்து கின்ருன். சாதல் இயல்பு; யாரையும் அ.து விடாது; எல்லாருக்கும் பொது; பிறப்பில் எழுந்த எ வரும் இறப்பில் விழுந்து மறைதல் இயற்கை கியமமாயுள்ளது; இயல்பான அந்த இறப்பை உயர்வான சிறப்பில் பயன் படுத்த வேண்டும் என்று அவன் உளம் துணிந்து கொண்டது உலகம் அறிய வங் தது. மாண்டுபட மூண்டவன் நீண்ட புகழை வேண்டி கின்ருன் .