பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4763 யாண்டும் மூண்டு திக்கு விசயம் புரிந்து பத்துத் திசைகளையும் வென்று எத்திசையிலுள்ளாரையும் அடக்கி ஆண்டு இமையவ ரும் ஏவல் செய்ய உச்ச நிலையில் ஒளிமிகுந்து வாழ்ந்து வந்தவன் ஆதலால் அழிவு நேர்ந்த போதும் எளிமை சேர்ந்த மாளேன் எனத் தனது உறுதி நிலையை அறுதியிட்டு இறுதியில் உரைத் தான். உள்ளத்திறலும் உறுதியும் ஊக்கமும் மான வுணர்ச்சியும் மதிப்பின் கதிப்பும் விதியின் விளைவும் இங்கே அதிசய கிலையில் வெளியாயின. இலங்கைவேங்கன் இயல்பை வியந்து நிற்கிருேம். அயராத வயிரவுள்ளம் உயர்வாய் ஒங்கி நிற்கிறது. گی۔y GUز மைத் தலைமகனுடைய துயர நிலைகளையும் உறுதியுரைகளையும் ஒரு சிறிதும் கருதியுணராமல் பெரிதும் ஆங்காரமாய் ஒங்கி ஆனவத் திமிருடன் தன் உறுதி நிலையை வலியுறுத்தினன். விருேடு மகனிடம் இவ்வாறு கூறி வந்தவன் விரைந்து எழுந்து நேரே போருக்குப் போக மூண்டு தன் தேரைக் கொண்டு வரும்படி அயலே கின்றவரை ஆர்த்துப் பார்த்தான். வல்லியம் முனிந்தால் அன்னுன் வருகதேர் தருக என்ருன். புலிப் போத்து வெகுண்டு சீறியது போல் இலங்கை வேந்தன் விரைந்து கின்ற நிலையை இது வரைந்து காட்டியுள் ளது. வல்லியம்= புலி. கொடிய காட்டு மிருகம் காண வந்தது. போரை நோக்கிப் போக நேர்ந்தவன் நேரே தேரைத் தருக என்று சீறி நோக்கவே இந்திர சித்து விரைந்து கடுத்து 'எந்தையே! பொறுத்தருளுங்கள்; நானே போகின்றேன்; வென்று வருகின்றேன்’ என்று உள்ளம் கன்றி יש גסהסJה& bל כהה. L-A உரைத்து உருத்து எழுந்து தன் மாளிகையை அடைந்து அரிய ஆயுதங்களே ஆய்ந்து கொண்டு நெடிய துயரங்களை நெஞ்சில் அடக்கி ஆளரிபோல் அடலாண்மையோடு வெளியேறினன். இந்திரசித்து எழுந்த நிலை. தந்தையின் அழிவு நிலையை எண்ணி எண்ணி விழி சீர் சொரிந்து கழிபெருந்துயரோடு இரதம் ஏறி இக் குலமகன் போர்முகம் நோக்கிப் போகும்போது இலங்கை வாசிகள் எல் லாரும் கலங்கியழுது உழுவலன்புடன் தொழுது வணங்கி