பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#876 கம்பன் கலை நிலை வங்கன. மூல பலச்சேனைகளைக் கண்ட தேவர்கள் குடல் கலங்கி ஒடி வந்து கண்ணுதல் கடவுளை வணங்கிக் கடுங் திகிலோடு அப 'ய்ம் புகவே அப்பெருமான் ஆறுகல் கூறி கே.அகல் பெறும்படி அவர்க்கு அருளியுள்ள மொழிகள் பொருள் பொதிந்து போக ஒளிகளை விசி நிற்கின்றன. எண்ணரிய நிலையில் விண்ணவரும் அஞ்சி அயர மண்ணுலகில் நெடிய கடல்கள் போல் மண்டியெ ழுந்த கொடிய அரக்கர் திரள்களை இராமன் எளிதே அழித்து ஒழித்து விடுவான் என இறைவன் தெளிக்கருளியது இமைய வர்க்கு வியப்பையும் விழிப்பையும் விளைக்கருளின. இராமன் என்று வெளிப்படையாகப் பெயரைக் குறியாமல் அக்கொற்றவன் என வெற்றிப் பேரைச் சுட்டிக் கூறியது வெல்ல மூண்டு வ ங் துள்ள அவனது மூல நிலையை நன்கு விளக்கி கின்றது. இராம அனுடைய அவதாரம் அதிசய மருமமுடையது; தேவரும் அறய முடியாக து; பரமன் ஒருவனே அறிய வுரியது; அதல்ை பரம ரகசியம் என இராமாவதாரம் மருவி வந்துள்ளது; அவ்வுண்மை யை உரிமையோடு ஈண்டு நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். s உள்ளம் தேறி அமரர் அமைதியாய் இருக்கும்படி ஈசன் இவ்வாறு உறுதி கூறி ஆறுதல் புரியவே அவர் தேறி நின்றனர்; சிறந்த அறிவாளிகளாயினும் மூண்டு வந்த கிருகர் படைகளைக் கண்டு தேவர் தியங்கி மயங்க நேர்ந்தனர். அவரது மயக்கம் தெளிய மகாதேவன் விதி நிலையை விளக்கி மதிநலம் அருளினன். ஆண்டவன் அறிவுரை நீண்டவுறுதியை நினைவுறுத்தி அவரை நிலை நிறுத்தி கின்றது. உறுதிமொழி அமரர் உள்ளம் தெளிய வந்தது. இக்குலம் எல்லாம் பொன்று விப்பதோர் விதி தந்தது. கடல்கள் போல் பொங்கி யெழுந்து யாண்டும் அ ட ல் கொண்டு வருகிற இந்த அரக்கர் குலத்திரள்கள் யாவும் ஒருங்கே "அழிந்து நாசமாகும்படி ஊழ்வினை திரட்டிக் கொண்டு வருகிறது என அவரது அழிவு நிலையை விழி தெரியத் தெளிவாக விளக்கி யருளிஞர். அச்சக்கால் அமைந்து கலங்கிய தேவர் யாவரும் பரமன் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டதும் உள்ளம் தேறி உறுதி பூண்டு நின்ருர். அச்சநிலை ஒழியவே உச்சநிலை ஓங்கியது. வானரங்கள் மறுகி ஓடியது. மூலபலபபடைகள் மூண்டு வருவதைக் கண்டதும் வானரங்கள்