பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4912 கம்பன் கலை நிலை Dare to do your duty always; this is the height of true valor. [Simmons.] 'உன் கடமையைச் செய்ய எப்பொழுதும் துணிந்து கில்; அதுதான் உண்மையான உயர்ந்த வீரம்” எ ன் னு ம் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. அண்ணன் குறித்த குறிப்பின்படியே இலக்கோ டு சென்ற இலக்குவைேடு அனுமான் முதலிய யாவரும் நேரே போயினர். - - - - போர்க் கோலம். தன் பக்கல் நின்ற அனைவரும் ஒக்க நீங்கிய பின் இராமன் யுத்த சன்னத்தனுயினன். கவசத்தை மார்பில் இறுக்கிக் கட்டி அம்புப் புட்டிலை முதுகில் இணைத்துப் பிணித்து வில்லைக் கையில் ஏந்தி விர கம்பீரமாய் எழுக்கான். உக்கிர விரங்கள் ஒளி விசி வர வெளியேறி வக்க இவ்விரக் குரிசிலின் விக்ககநிலை வியத்தகு கலையாய் விளங்கி வெற்றித் திறல்களை விளக்கி கின்றது. நெடிய கடல்போல் அடல் கொண்டு விரித்து பரந்து நின்ற சேனைத் திரள் எதிரே இம் மானவீரன் சென்றபோது வானத் தவர் யாவரும் மறுகி இரங்கினர். யாண்டும் எ ல் லே கான முடியாதபடி அடல் மீறி கிற்கிற படைகளின் பரப்பையும், ஒரு வில்லோடு தனியே வருகிற இராமனது கணிமையையும் கண்டு மண்ணும் விண்ணும் கண்ணிர் விட்டுக் கலங்கின. அப்பொழுது விண்ணுேர் எண்ணித் துதித்து ஏக்தித்தொழுதனர்; விழுமிய நிலை யிலுள்ள அவர்போற்றியது பேரன்பின் பரிவுகளாய்ப்பெருகியது. இமையவர் ஏத்தியது. கண்ணனே! எளியேம் இட்ட கவச்மே! கடலே அன்ன வண்ணனே! அறத்தின் வாழ்வே மறையவர் வலியே! மாருது ஒண்னுமோ நீ அலாதோர் ஒருவர்க்கு இப்படைமேல் ஊன்ற எண்ணமே முடித்தி என்ன ஏத்தினர் இமையோர் எல்லாம். ' முனிவர் வாழ்த்தியது முனிவரே முதல்வர்ஆய அறத்துறை முற்றி ைேர்கள் தனிமையும் அரக்கர் தானேப்பெருமையும் தரிக்க லாதார் பனிவரு கண்ணர் விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னர்