பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5209 பாவத் தொடர்புகளையும் அவற்றைச் செய்து வருக ம பாதகர் களையும் உள்ளம் கனன்று எங்கும் எள்ளி இகழ்ந்த வருகிருன். பாவ இனங்களைப் பாழாக்கி ஒழிக்கவே பூவலயத்தில் இவன் வந்திருக்கிருன். அவ்வாறு வந்துள்ள வரவை இவ்வாறு வக் துள்ள வார்த்தைகள் செவ்வையா வார்த்துக் காட்டியுள்ளன. உய்யும் வழிகளைப் பலவகைகளில் பலமுறை காட்டி வங் தம் அவ்வெய்யவன் விழி திறந்து உய்யாமல் உயிரழிய சேர்க் தானே ! என்று இவ் ஐயன் துயருழக்த வைய நேர்ந்தமையால் வெப்ய சொல் விருேடு நீண்டு மூண்டு வெளியே வந்தது. - முதலில் அங்கதனைத் தாது அனுப்பி அமைதியை நாடினன். சமாதானத்துக்கு உடன்படாமையால் சமர் மூண்டது; முதல் நாள் போரில் மூண்டு பொருத சேனைகளை எல்லாம் நாசம் ஆக்கி முடிவில் அவனை நோக்கி ஐயா! இன்று போய் காளை வா என்று இவ்வென்றிவிரன் அளிபுரிந்து தெளிவடைய வெளியேவிட்டான். உயிர் பிழைத்து அவ்வாறு வெளியே போனவன் உறுதி நிலையை உணர்ந்து உய்ந்திருக்கலாம்; பின்பு கும்பகருணன், அதி காயன் முதலிய அருமையான உரிமையாளரைப் போருக்கு எவிப் பொன்றச் செய்தான்; பல்லாயிரம் அரக்கர்கள் பாழாப் அழிந்தனர்; இறுதியில் இந்திர சித்தும் மடிக்கான்; கலைமகனே இழந்த வுடனவது நிலைமை தெரிந்து நேருக்கு வந்திருக்கலாம்; அங்ங்னம் வரவில்லை; முடிவில் மூல பலங்களை எவின்ை; முழு தும் தொலைந்தன; இவுகளிலிருந்த கி ரு த ர் இனங்கள் யாவும் பாழாயின; இறுதியில் தேர் ஏறி நேரே போராட நேர்ந்தான்; போரில் பல துயரங்களை அடைந்தான்; யாதும் செய்ய முடியா மல் செயல் இழந்து ம ய ங் கி கின்ருன்; அக்கச் சமையமும் அவனைக் கொன்று வீழ்த்தாமல் இவ்வென்றி வீரன் அருள் புரிந்து கின்றன். ஆனவரையும் ஆதரவுகளையே ஆற்றியருளினன். இன்னவாறு பலவழிகளிலும் உய்திபெறும் வழியை உதவி வந்தும் உணர்ந்து உய்யாமல் செத்து வீழ சேர்க்கான் ஆதலால் இவ்வுத்தம வீரன் சித்தம் கொதித்து இப்பாதகன் எ ன்று வேதனை யோடு வெறுத்து வைதான். இவ்வளவு வெவ்விய சொல் செவ் விய வாயிலிருந்து எவ்வளவோ துயரோடு வெளிவர நேர்ந்தது. 652