பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5214 கம்பன் கலை நிலை அடலாண்மையும் ஊழிக் காலத்து உருத்திர மூர்த்தியின் உக்கிர வேகங்களாய்த் தோன்றி உலகத்தை நிலைகுலைத்து கின்றன. மார்பில் புக்கு உயிர் பருகிப் புறம் போயிற்று. இராவணனுடைய மார்பில் பாப்ந்து ஊடுருவி அதிவேக மாப் இராமபாணம் மேலே போயிருக்கும் நிலையை இ.த புலப் படுத்தியுளது. தின்று, பருகி என்றது கின்று கின்று கினைக் து சிந்திக்க வுரியது. அரிய உயிரைப் பிரியமாப் பருகிப் போய தி. உணவை உண்ட மனிதன் உடனே தண்ணிர் குடிக்கிருன்; உண்ணும்.உணவும் பருகும் நீரும் அவனுடைய உடலுக்கு உறுதி தருகின்றன. அக்க உறுதி ஊற்றங்கள் இங்கே கண்ணும் கருத்துமாய்க் காண வந்தன. இராவணனுடைய அரிய உயிரைப் பருகிப் போயுள்ள பாணம் உறுதியடைந்து ஒளி மிகுந்துள்ளது. முதலில் அவனுடைய அடலாண்மைகளை அடக்கி அதன் பின்பே உயிரைக் குடித்திருக்கிறது. திக்கோடும் உலகு.அனைத்தும் செருக் கடந்த புயவலி என்றது அவனது அதிசய வன்மைகளே அறிந்து கொள்ள வந்தது. அமரர் அசுரர் முதலிய யாவரையும் வென்று அகிலவுலகங்களிலும் சென்று தனது வெற்றிக் கொடி யை நாட்டித் திக்கு யானைகளே அடக்கி எங்கும் இசை பரப்பிப் பொங்கிய விருேடு யாண்டும் செயவிருது பெற்று வந்துள்ள வன் ஆதலால் அந்த வெற்றி நிலைகளை இங்கே நன்கு விளக்கினர். வென்று வருவதையே எங்கும் வியந்து கண்டு வந்தவன் இங்கே பொன்றி முடிந்திருக்கிருன். காலனும் கலங்கி நடுங்க யாண்டும் விலங்கா வென்றியனுப்த் துலங்கி கின்ற இலங்கை வேந்தன் ஈண்டு விளித்து வீழ்த்தது வியப்பாப்கின்றது. உயிரைப் பருகி வாளி உயரப் போகவே உடல் அ ட லோ டு கரையில் விழுந்தது. அது விரைந்து போன நிலை வியப்பாய் கின்றது. --- இராகவன் தன் புனித வாளி. இராவணனைக் கொன்று வீழ்த்தி வென்றி விருேடு மேலே வேகமாய்ப் போயுள்ள பகழி இவ்வாறு புகழ வந்துள்ளது. 'மனித உலகுக்கும் தெய்வவுலகுக்கும் வெப்பதுயரமாய் விரிந்து (கின்ற கொடியவனை அடியோடு அழித்து ஒழித்துள்ளமைால் புனித வாளி என்று இனிய மொழியால் போற்றி கின்ருர்,