பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5217 அணுகுண்டைப் போலவே அகிலத்தையும அழகை வல்ல ஆற்றலை இராமபாணம் உடையது; ஆயினும் இராமனுடைய ஆணையின் படி நீதி வரம்போடு கின்று எவியவாறு தொழில் புரிந்து எவ்வழியும் செவ்வையாய்ச் சேவை செய்து வருகிறது. o இராமபாணத்தின் இயல்பு. தருமநீதியின் பொருட்டே யாண்டும் அது கருமம்,செப் கிறது. தீயோர்களுக்கு அது ஊழித்தியாகிறது. - நல்லோர் களுக்கு நலம் பல புரிகிறது. வடவைக்கனலும் எமனும் சண்ட மாருதமும் ஒருங்கே உருவம் கொண்டதுபோல் பாவிகள் மருங்கே இராமபாணங்கள் பயங்கரமான அழிவுகளை ஆம்ம கின்றன. அவற்றின் அதிசய வலிகளை யாவரும் துதி செய்து போற்றுகின்றனர். பாவிகளின் ஆவிகளைப் பருகி வருகின்றன. காவில்ை உலகை நக்கிடுவ; திக்கு அளவிடற்குரிய நாளும் மேவுதிவிடம் உயிர்ப்பன; வெயிற்பொழி எயிற்றன; அவ்விரர்’ ஆவமாம் அரியபுற்று உறைவ; முற்றறிவருக்கு அழிவு செய்யும் பாவ காரியர் உயிர்ப்பதமலாது இரைபெருப் பகழி காகம். (உயுத்த, மந்திர 88) முன்னம் இராவணனுக்குப் புத்திமதி கூறும் பொழுது விபீ டணன் இன்னவாறு இராமபாணங்களின் அதிசய ஆற்றல்களே TH ணர்த்தியிருக்கிருன்) அந்த மதிமானுடைய உரைகள் உணர் வின் ஒ வரி க ளை விசியுள்ளன. கவியைக் கருதிக் காண்பவர் பொருளைத் துருவிப் பகழிகளின் நிலைகளை உணர்ந்து கொள்வர். பாவிகளுடைய உயிரே அப்பகழிக்கு இரை என்று குறிக் திருப்பது இங்கே கூர்க் து சிந்திக்கத் தக்கது. அன்று அங்கத் கம்பி கூறியபடியே கிருதரைக் கொன்று வந்தது; இன்.று இந்த அண்ணன் உயிரை இராமபாணம் இங்கே பருகிப் போயுளது கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரைக் கலந்த காலே. இராமனுடைய அம்புத வாளியின் அதிசய ஆற்றலைக் குறிக்க இராவணனும் முன்னம்: இப்படி மாலியவானிடம் வியக்க புகழ்ந்து கூறியிருக்கிருன் விர ப்ப கழியின் வி க் த க

  • இந் நூல் பக்கம் 3966 வரி 20 பார்க்க.

653