பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5226 கம்பன் கலை நிலை இந்திரன் செல்வம் மாயும் இமையவர் பதங்கள் மாயும் மந்தரம் பொடியாய் வீழும் மறிகடல் வறளதாகும் சந்திரன் இரவி மாண்டு கரையதும் அழியும் என்ருல் இந்தர்ேக் குமிழி யாக்கை இயல்பினே இசைத்தற்கு உண்டோ? (குறுந்திரட்டு) கருவினின் மழவில் கற்கும் காலேயின் பருவம்ஆறின் பெருகிய பொழுதின் கோயின் பிரிவினின் பகையின் ஈட்டும் பொருள்வயின் வேட்டதுஎய்தாப்புன்மையின் முதுமைதன்னின் மருவிய திழப்பின் சாவின் வன்துயர் மனிதர்க்கு உண்டே. (தணிகைப்புராணம்) படர்கிரித் தலைப் பால்மதி போல்கரிப் பிடர்கிழற்று கவிகையில் பேர்ந்தவர் கடல்கிலத்தில் கவிழ்ந்தனர் அன்றி மற்று உடல்எடுத்து எவர் சாவை ஒருவினர்? (பிரமோத்தரகாண்டம்) பாளேயாம் தன்மை செத்தும் பாலனம் தன்மை செத்தும் காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வயதுமின்னே மேல்வரு மூப்பும் ஆகி நாளுநாள் சாகின்ருமால் நமக்குகாம் அழாதது என்னே? து (குண்டலகேசி) மின்போல் அழியும்வயிற்ருமை வடிவாயழியும் மெய்யுருவாய் முன்போல்அழியும் பிறந்தழியும் மடவாருடனே முயங்கியதன் பின்போய் அழியும் கரைத்தழியும் பேய்போல் கிரிந்துபெயர்ந்தழியும் பொன்போல் வளர்த்தும் இவ்வுடலம் கி லேயா கழிந்து போய்விடுமே. (செவ்வங்கிப்புராணம்) மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்கம் மன்ன ராகித் திக்கெலாம் அடிப்படுத்தும் திகிரியம் செல்வர் ஏனும் அக்குலத்து உடம்பு தோன்ற அன்றுதொட்டு இன்றுகாறும் ஒக்ககின் ருர்கள் வையத்து ஒருவரும் இல்லை யன்றே. (யசோதாகாவியம்) கண்ம்ஒன்று கழியும் தோறும் கவர்ந்ததம் ஆயுள் காளின் கணம்ஒன்று கழியத் தாம்போய்க் காலன்வாய் விழுவது.ஒரார்; குணம்ஒன்றும் கொள்ளார்; அங்கோ குற்றமே கொழித்து கின்ருர்; பினம்என்று வரும்போது என்ன பெறுவரோ பேதையோரே? (வீரபாண்டியம்)