பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5234 கம்பன் கலை நிலை கின்ற மதயானைகளோடு விளையாட நேர்ந்தான். கூரிய கொம்பு களையுடைய அவை வீரியமாய் வெகுண்டு வந்து தன் மார்பில் பாயும்படி கேரே எதிர்ந்து கின்ருன். சுப் பிர தீபம் என்னும் தலைமை ஆன யானை முதலில் வந்து உக்கிர வேகமாய் உருத்துப் பாய்ந்தது; பாயவே தன் மார்பை அசைத்துக் குலுக்கினன்; அதன் கொம்புகள் பாதிக்கு மேல் ஒடிந்து போயின; அன்ன வாறே பின்னுள்ள யானைகளும் பிழைபட்டு இன்னலுழந்து கின் றன. உள்ளே பாய்ந்து ஒடி பட்டு கின்ற யானைக் கொம்புகளை அராவி ஒழுங்கு படுத்தி நவமணிகளைச் சூழ அழுத்தி வீரப்பதக் கங்களாகத் தன் வெற்றித்திறல் விளங்க அமைத்துக் கொண் டான். முத்து மாலை வயிர கண்டிகைகளை விட அவை வித்தக ஒளிகளை வீசி மேலான வெற்றி நிலைகளை விளக்கி கின்றன. வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும் என இன்னவாறு இவனுடைய மார்பும் தோளும் வானும் வையமும் புகழ்ந்து வர உயர்ந்து வந்தன. வீர வெற்றிக்குச் சிறந்த அடையாளமாக விளங்கியிருந்த அவை போரில் பானங் கள் பாயவே மார்பிலிருந்து முதுகின் வழியே ஊடுருவிப் போ யின. முதல் நாள் போரில் அனுமானேடு சேர்ந்த குத்துச் சண் டையிலும் சில குலைந்து விழுந்தன. அந்த முதுகுத் தழும்புகளின் உண்மை கி லை களே உணர்த்து உறுதி விரங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும். அசுரகுல காலனப் அதிசய ஆற்றல்கள் பெற்றுள்ள திருமால் முதலான தேவர்கள் யாவரும் இவனே வெல்லுதல் அரிது என்று பலகாலமும் வெருவி நின்றுள்ளனர்; இன்று நீ இவனைக் கொன்று வெற்றி பெற்று கின்றுள்ளாய்; மெய்யான இந்த வெற்றி நிலையை அவரிடம் போப்ச் சொன்னல் அவர் யாதும் கம்பார்; பொப் என்றே கூறி மாறுபடுவர். இலங் கேசன வெல்லவல்ல ஒரு ஈசனும் உண்டா? என வாசவன் ஆதி யர் மறுகி மயங்கி வருவது மரபாப் வந்துள்ளது. வீர நாயகா! இறுதியில் உறுதியாக அடியேன் ஒன்று துணிந்து சொல்லு கின்றேன்; நீங்களும் இராவணனை வென்று விட்டதாக கினைந்து கொள்ளலாகாது; கானகவே அகியாயமாய் இவன் பொன்றி முடிந்துள்ளான். உலகமாதா என்று எவரும் தொழுது வணங்