பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5248 கம்பன் கலை நிலை 'வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவுகொண்ட நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சினேன்" (மாயாசனக, 10] தனக்கு காசத்தைத் தானே விளைத்தக் கொண்டதாக இராவணன் இன்னவாறு முன்னம் இன்னலுழந்துள்ளான். நஞ்சுதோய் அமுதம் எனச் சீதையை அவன் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்க வுரிய தி.கும்ப கருணன், வீடணன், மண்டோகரி முதலியோர் ைேகயைக் குறித்துக் கூறிய சீரிய நீதி மொழிகள் அவன் உள்ளத்தில் ஊடுருவி யிருக்கின்றன. தன் இச்சைக்கு இசையாமல் தன் உயிரைக் கொல்லாமல் கொல்லுதலால் இப்படி அல்லல் மீதுார்ந்து சொல்லினன். தீய எண்ணம் இராவணன் நெஞ்சில் புகுந்தது; அது கொடிய நஞ்சாப் நீண்டு முடிவில் அவனைக் கொன்று தொலைத்தது. அந்தக் கொலை நிலை இங்கே புலனப் கின்றது. * Oh! you do bear a poison in your mind That would not let you rest in paradise. (Wells) உன் நெஞ்சில் ே ஒரு நஞ்சை வைத்திருக்கிருப்; அது உன்னைச் சுவர்க்கத்தில் வையாது என இது குறித்துள்ளது. தீய எண்ணக்கை நெஞ்சில் உடையவன் நஞ்சைக் குடித்த வனப் நாசம் அடைந்து கர கில் விழ்கின்ருன். அந்த உண்மை யை இது இங்கனம் செம்மையா விளக்கியிருக்கிறது. அதிசய ஆற்றலோடு அகிலவுலகமும் துதி செய்ய வாழ்ந்து வந்தவன் அவல கினை வால் அவமே அழித்தான். அந்த அழிவு நிலையை நினைக்க இளையவன் அழுது புலம்புகின்ருன். எண்ணில் ஆற்றல் அண்ணு ஒ அண்ணு ஒ என்று தம்பி கண்ணிர் சொரிந்து கதறியிருப்பது நமக்கும் கண்ணிர் வரச் செய்கிறது. மறைந்திருந்த பிறவிப்பாசம் மடைதிறந்தவெள்ளம் போல் வெளியே விரிந்து விரை ந்து பாய்கிறது. உரிய முறையை உவத்து கூறிப் பிரியம் மீதுார்ந்து பெரிதாய் ஒலமிட்டுள்ளான். திேமுறை திரிக் து அண்ணன் தீது செய்ய சேர்ந்தபோது அவைேடு நான் பிறக்கவில்லை என்று வெறுத்து விட்டு வெளியே பிரிந்து போனவன் அவன் இறந்து கிடப்பதைக் கண்டதும்